வாரிசு படத்தின் வெளியீட்டு உரிமம் யாருக்கு? அதிகாரபூர்வ அறிவிப்பு!
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றியது பிரபல நிறுவனம்.
விஜய், ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' என்கிற படத்தில் நடித்து வருகிறார் விஜய். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார்.
இப்படத்துக்கு இசை - தமன். தமிழில் படமாக்கப்பட்டு தெலுங்கில் டப் செய்யப்பட உள்ள இந்த படம் 2023 பொங்கல் தினத்தன்று ரிலீஸ் ஆகவுள்ளது.
சமீபத்தில் வாரிசு படத்திலிருந்து ‘ரஞ்சிதமே’ பாடல் வெளியாகி 50 மில்லியன் (5 கோடி) பார்வையாளர்களை கடந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
திரையரங்க ஒதுக்கீட்டிற்காக ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் 670க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் துணிவு படத்தை வெளியிட ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் இது வாரிசு படத்திற்காக ஒதுக்கப்படும் திரைகளை விட கூடுதல் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் படத்தினை யார் வெளியிடுவார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்திருந்தது.
இந்நிலையில், நடிகர் விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை கைப்பற்றியது 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம். மாஸ்டர் படத்தினை வெளியிட்டதும் இதே நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூரவ் அறிவிப்பாக வெளியிட்டு உள்ளது.
Related Article
லோகேஷ் சினிமாடிக் யுனிவர்சில் ‘தளபதி 67’?: வெளியான புதிய தகவல்!
பனையூரில் நடிகர் விஜய்: ரசிகர்களை சந்திக்க காரணம் என்ன?
த்ரிஷா பகிர்ந்த முத்தக் காட்சி: வைரல் விடியோ
ட்விட்டரில் இணைந்த மூத்த இசையமைப்பாளர்!
விஷாலின் ‘லத்தி’: ரிலீஸ் தேதி அறிவிப்பு!
‘அன்பான ரசிகர்களே...’ : சமந்தாவின் நெகிழ்ச்சி பதிவு
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.