ஆட்டோ ஓட்டுநர்களுடன் லெஜண்ட் சரவணன்! வைரல் புகைப்படங்கள்
ஆயுதப் பூஜையை ஆட்டோ ஓட்டுநர்களுடன் கொண்டாடிய லெஜண்ட் சரவணனின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
ஆயுதப் பூஜையை ஆட்டோ ஓட்டுநர்களுடன் கொண்டாடிய லெஜண்ட் சரவணனின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
சரவணா ஸ்டோர் விளம்பரங்களில் கலக்கிய லெஜண்ட் சரவணன் ‘தி லெஜண்ட்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படத்தை உல்லாசம், விசில் போன்ற படங்களை இயக்கிய ஜேடி ஜெர்ரி இந்தப் படத்தை இயக்கியிருந்தனர்.
இதையும் படிக்க | குடிபோதையில் ரகளை: நடிகர் விநாயகன் கைது
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, அவ்வப்போது லெஜண்ட் சரவணன் ட்விட்டரில் பகிரும் புகைப்படங்கள் வைரலானது. இவரின் புதிய படத்துக்கான அப்டேட்டை பலரும் எதிர்பார்த்துள்ளனர்.
இந்த நிலையில், ஆயுதப் பூஜையை திங்கள்கிழமை இரவு ஆட்டோ ஓட்டுநர்களுடன் சரவணன் கொண்டாடும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பரிசு வழங்கிய சரவணன், அவர்களின் கோரிக்கையை ஏற்று ஆட்டோ ஓட்டினார்.
தற்போது லெஜண்ட் சரவணன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.