வாரிசு, துணிவு: முதல் நாள் முதல் காட்சி பற்றிய அப்டேட்!
வாரிசு, துணிவு ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஜனவரி 11ஆம் நாள் ஒரே நாளில் வெளியாகுமென அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகின.
பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். சங்கீதா, ஷியாம், பிரகாஷ்ராஜ், சரத் குமார் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.
நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'துணிவு'. வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ளது. மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்த இரண்டு திரைப்படங்களும் ஜனவரி 11ஆம் நாள் ஒரே நாளில் வெளியாகுமென அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், ஜனவரி 11ஆம் தேதி துணிவு திரைப்படம் நள்ளிரவு 1 மணிக்கும், வாரிசு திரைப்படம் அதிகாலை 4 மணிக்கு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.