FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

அதிகரிக்கும் காட்சிகள்: ரசிகர்கள் பாராட்டு மழையில் போர் தொழில் திரைப்படம்!

நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான போர் தொழில் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 

Updated On : 10 ஜூன் 2023, 3:20 pm IST
பகிர்:

சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அசோக் செல்வன். தெகிடி, ஓ மை கடவுளே போன்ற வெற்றி படங்களில் நடித்தவர். தற்போது இவர் நடிப்பில் கடந்தாண்டு பல படங்கள் வெளியானது. சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம். எஸ்டேட் படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். 

ராட்சசன் திரைப்படம்

தமிழில் 2018இல் வெளியான ராட்சசன் திரைப்படம் சிறந்த க்ரைம் தில்லர் படமாக தமிழக மக்களின் ஆதரவினை பெற்றது. இத்திரைப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் அமலா பால் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். தற்போது அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘போர் தொழில்’ திரைப்படம் மக்களின் ஆதரவினை பெற்றுள்ளது. பலரும் ராட்சசன் படத்துடன் ஒப்பிட்டு பாராட்டி வருகின்றனர். 

Advertisement

Advertisement

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவான போர் தொழில் திரைப்படம் அடுத்தடுத்து நடக்கும் கொலைக்கான குற்றவாளியை தேடும் திரைப்படம். இதில் காவலதிகாரியாக அசோக் செல்வன், சரத் குமார் நடித்துள்ளனர்.  நிகிலா விமலும் சிறப்பாக நடித்துள்ளார். விக்னேஷ் ராஜா, ஆல்பிரட் பிரகாஷ் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளார்கள். 

மக்களின் ஆதரவினை அடுத்து போர் தொழில் படத்திற்கு கூடுதல் காட்சிகளும் திரையரங்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் படத்திற்கு மக்கள் பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர். சிலர், “ராட்சனை விட நல்ல படம்” எனவும் கூறி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments