கமல் - மணிரத்னம் படத்தில் த்ரிஷா?
'நாயகன்’ படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி இணையும் படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது.
பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் நடிகர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: 6-வது நாள்.. ரூ.621 கோடி வசூல்.. மிரட்டும் பாலிவுட் பாட்ஷா!
Advertisement
Advertisement
இப்படத்தின் படப்பிடிப்புஅடுத்தாண்டு துவங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, இப்படத்தில் கமலுக்கு வில்லனாக நடிகர் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் த்ரிஷா, துல்கர் சல்மான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.