விடாமுயற்சி படப்பிடிப்பு அப்டேட்!
அஜர்பைஜானில் நடைபெற்று வந்த விடாமுயற்சி படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.
’மங்காத்தா’ படத்துக்குப் பின், நடிகர் அர்ஜுன் இத்திரைப்படத்தில் அஜித்குமாருடன் மீண்டும் இணைந்து நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
இந்தப் படத்தில் ஆரவ், ரெஜினா, சஞ்சய் தத், முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தினை எட்டியுள்ளது. தீபாவளிக்கு படத்தினை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.
நடிகர் அஜித்குமார் மிக ஆபத்தான காட்சிகளுக்கும் டூப் போடாமல் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்ற விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு எங்கு, எப்போது என்கிற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.