நாயகனாகும் சிவாஜி பேரன்!
சிவாஜியின் பேரன் சினிமாவில் அறிமுகமாகிறார்...
நடிகர் சிவாஜியின் பேரன் நாயகனாக அறிமுகமாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறைந்த நடிகர் சிவாஜியின் மகன்களான ராம்குமார், பிரபு இருவரும் திரைத்துறையில் இருக்கின்றனர். இதில், ராம்குமார் தயாரிப்பாளராக பல படங்களைத் தயாரித்து சில படங்களில் நடிக்கவும் செய்தார்.
நடிகர் பிரபு தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக இருந்து, தற்போது முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவருடைய மகன் விக்ரம் பிரபுவும் முன்னணி நடிகராக இருக்கிறார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ராம்குமாரின் மகன் தார்ஷன் கணேசன் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளாராம். இவர் நாயகனாக நடிக்கும் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: பாக்ஸிங் பயிற்சியில் துஷாரா விஜயன்: எந்தப் படத்திற்காக?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.