ஸ்பைடர்மேன் போல உடல் வேண்டுமா? டாம் ஹாலண்ட் பகிர்ந்த உடற்பயிற்சி ரகசியம்!
ஸ்பைடர்மேன் நாயகன் டாம் ஹாலண்ட் பகிர்ந்த உடற்பயிற்சி ரகசியம் குறித்து...
ஸ்பைடர்மேன் நாயகன் டாம் ஹாலண்ட் (30 வயது) பகிர்ந்த உடற்பயிற்சி ரகசியம் சமூக வலைளத்தில் வைரலாகி வருகின்றன.
டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கத்தில் ’ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' என்ற ஹாலிவுட் திரைப்படம் உலகளாவிய வெளியீட்டிற்கு ஒரு நாளைக்கு முன்பாகவே ஜூலை 30ஆம் தேதி இந்தியாவில் வெளியானது.
இந்தப் படத்தில் மீண்டும் ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்தில் டாம் ஹாலண்ட்டும், மிஷெல் ஜோன்ஸ்-வாட்சன் கதாபாத்திரத்தில் ஜெண்டயாவும் நடித்துள்ளனர். மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் இந்தியாவில் மட்டுமே ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது.
Advertisement
Advertisement
உலக அளவில் இந்தப் படம் 1.75 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ 16,732 கோடி) வசூலித்து அசத்தியுள்ளது. இதில் ஸ்பைடர் மேனாக நடித்த டாம் ஹாலண்ட் உடல் அமைப்பு பலரையும் கவர்ந்தது.
இந்த உடல் அமைப்புக்காக அவர் செய்யும் சிறப்பான உடற்பயிற்சி பற்றி நேர்காணல் ஒன்றில் டாம் ஹாலண்ட் கூறியிருந்தார். அதில் அவர் பேசியிருந்ததாவது:
நான் கிராஸ்ஃபிட் சிண்டி (crossfit cindy) எனப்படும் உடற்பயிற்சி முறையை பின்பற்றுகிறேன். 20 நிமிஷத்தில் 5 ஃபுல் - அப்ஸ், 10 புஸ் - அப்ஸ், 15 ஸ்குவாட்ஸ் செய்ய வேண்டும். இதில் என்னுடைய தனிப்பட்ட சாதனை 27 என்றார்.
இந்த விடியோ சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது. பலரும் டாம் ஹாலண்ட் கூறியதை முயற்சி செய்து வருகிறார்கள். எப்படி செய்தாலும் 27 முறை அந்தக் கூட்டிணைவு செய்ய முடியாமல் பலரும் திணறி வருகிறார்கள். எப்படியாகினும் இது ஒரு நல்ல மாற்றமாக மாறியிருக்கிறதென இணையவாசிகள் கருத்து கூறி வருகிறார்கள்.
Spider Man fame Tom Holland reveals his go-to workout for when he’s short on time
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.