தளபதி பொங்கல்: மாஸ்டர், லியோ நாளை மறுவெளியீடு!
விஜய்யின் மாஸ்டர், லியோ திரைப்படங்கள் நாளைமுதல் மறுவெளியீட்டுக்கு வரவிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு
விஜய்யின் மாஸ்டர் மற்றும் லியோ திரைப்படங்கள் நாளை முதல் மறுவெளியீட்டுக்கு வரவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மாஸ்டர் மற்றும் லியோ திரைப்படங்களை நாளைமுதல் (ஜன. 9) மறுவெளியீடு செய்யவிருப்பதாக தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் அறிவித்துள்ளனர்.
ஜன நாயகன் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் விவகாரம் தொடர்பாக படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், விஜய்யின் மாஸ்டர் மற்றும் லியோ படங்கள் மறுவெளியீட்டுக்கு வரவுள்ளன.
Advertisement
Advertisement
விஜய் - லோகேஷ் கனகராஜ் - அனிருத் கூட்டணியில் உருவான இந்த இரு படங்களின் டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டுள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜன நாயகன் ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும், மாஸ்டரும் லியோவும் திரையிடப்படுவதால் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
Grand opening with two Vijay's blockbusters Master & Leo into theatres
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.