சியான் - 63 படப்பிடிப்பு தொடக்கம்!
சியான் - 63 படப்பிடிப்பு குறித்து...
நடிகர் விக்ரமின் 63-வது பட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
நடிகர் விக்ரம் தன் 63-வது திரைப்படத்திற்குத் தயாராகி வருகிறார். ஆனந்த் ஷங்கர் இயக்கும் இப்படம் பெரிய பட்ஜெட்டில் முழு ஆக்சன் திரைப்படமாக உருவாகவுள்ளது.
வீர தீர சூரன், தங்கலான் ஆகிய படங்கள் வணிக ரீதியாக பின்னடவைச் சந்தித்ததால் விக்ரமும் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
Advertisement
Advertisement
ஆனந்த் ஷங்கருடனான படத்திற்காக உடலைக் கட்டுமஸ்தாக மாற்றும் முயற்சியிலும் இருப்பதால் உடல்பயிற்சிகளைத் தீவிரமாக செய்து வந்தார்.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரியா ஷிபு நாயகியாக நடிக்க நடிகர்கள் எம். எஸ். பாஸ்கர், ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
Filming for actor Vikram's 63rd movie has begun.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.