FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பட்ஜெட் ரூ.2 கோடி, ஆனால் ரூ. 300 கோடிக்கும் அதிகம் வசூல்! பாக்ஸ் ஆபீஸில் ‘ஹனுமன் அன்ஸ்’ சாதனை

பாலிவுட்டில் வெறும் ரூ.2 கோடி பட்ஜெட்டில் தயாரான படம் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனைப் படைத்திருப்பது பற்றி....

20 செப்டம்பர் 2026, 1:20 pm IST
ஹனுமன் அன்ஸ்
பகிர்:

பாபா நீம் கரோலின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவான ஹனுமன் அன்ஸ் திரைப்படம் உலகளவில் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

விஷால் சதுர்வேதி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் ஷோபிநவ் சத்யா முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். மேலும் விஹான் ஷெட்ஜே, சந்தன் கே ஆனந்த், பூர்ணிமா திவாரி, அனில் ரஸ்தோகி, குல்ஷன் பாண்டே மற்றும் பகவதாஸ் படேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வெறும் ரூ. 2 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம், ஆகஸ்ட் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆரம்பத்தில் வெறும் 250 திரையரங்குகளில் மட்டுமே வெளியான படம், ரசிகர்களின் அமோக வரவேற்பைத் தொடர்ந்து தற்போது 2,000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

திரைப்பட வசூலைக் கணிக்கும் சாக்னில்க் தரவுகளின்படி, இப்படம் உலகளாவிய பாக்ஸ் ஆபீஸில் இதுவரை மொத்தம் ரூ.329.30 கோடி வசூலித்துள்ளது. பாபா நீம் கரோலி உத்தரப் பிரதேசத்தின் ஃபிரோசாபாத் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் 1900 ஆம் ஆண்டு பிறந்தார். பின்னர் 1973 இல் மறைந்தார்.

சிறுவயதிலேயே திருமணமான இவர், துறவறம் மேற்கொண்டு ஊர் ஊராகப் பயணித்தார். ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்ஸ், விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா போன்ற பிரபலங்கள் இவரது தீவிர பக்தர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

summary

"Hanuman Ansh", based on the life and teachings of spiritual leader Neem Karoli Baba, has earned over Rs 300 crore at the global box office.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments