FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ரைட்ஸ் நிறுவனத்தில் மேலாளர், உதவி மேலாளர் பணி: உடனே விண்ணப்பிக்கவும்!

மத்திய பொதுத்துறை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள காலிப்பணியிடங்கள் குறித்து....

8 அக்டோபர் 2026, 4:01 pm IST
ரைட்ஸ் நிறுவனத்தில் மேலாளர், உதவி மேலாளர் பணி - RITES Ltd
பகிர்:

மத்திய அரசின் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் 'நவரத்னா' அந்தஸ்து பெற்ற மத்திய பொதுத்துறை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனம் போக்குவரத்து, உள்கட்டமைப்பு மற்றும் அது சார்ந்த தொழில்நுட்பத் துறைகளில் ஒரு முன்னணி பன்முக ஆலோசனை நிறுவனமாகத் திகழ்கிறது. இந்நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து பார்ப்போம்...

பணி: Manager

Advertisement

Advertisement

காலியிடம் : 1 (UR)

சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு : 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant Manager

பிரிவு: Design Engineer,Bridges

காலியிடங்கள்: 10 (UR -5, EWS-1, OBC- 2, SC-1, ST -1)

பிரிவு : Cost Estimator

காலியிடம்: 1(UR)

பிரிவு : Survery

காலியிடங்கள்:2 ( UR-1EWS - 1)

பிரிவு : Bridge Rehabilita-tion & NDT Engineer

காலியிடங்கள்: 4 (UR - 2,OBC-1, SC - 1)

பிரிவு : Tunnel Engineer

காலியிடம்: 1 (UR)

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Cost Estimator பணிக்கு Structural Engineering-ல் முதுநிலைப்பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர்களுக்கு 600. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ.300. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.rites.com என்ற இணையதளம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 8.10.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

RITES Recruitment of Engineering Professionals on Regular Basis

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments