FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

உண்ணிக் காய்ச்சல் எப்படி பரவுகிறது? அறிகுறி என்ன?

கண்ணுக்குத் தெரியாத பூச்சி கடிப்பதால் உருவாகும் உண்ணிக் காய்ச்சல் பற்றி..

23 செப்டம்பர் 2026, 6:11 pm IST
உண்ணிக் காய்ச்சல் - file
பகிர்:

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுடன் சேர்ந்து உண்ணிக் காய்ச்சலும் பரவி வருகிறது. சுமார் நான்காயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இதுவரை உண்ணிக் காய்ச்சல் பாதித்திருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

கண்ணுக்குத் தெரியாத பூச்சி கடிப்பதால் அதிலிருந்து பாக்டீரியா பரவி, உண்ணிக் காய்ச்சல் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.

ஒரு குட்டிப் பூச்சி, அதாவது நாய், பூனைகளின் உடலில் இருக்கும் உண்ணி போன்ற ஒரு பூச்சி மனிதர்களை கடிக்கும்போது அதனால் உண்ணிக் காய்ச்சல் பரவுகிறது. அந்தப் பூச்சி கடித்த இடம், ஒரு கரும்புள்ளி போல உருவாகிறது. அதன்பிறகு காய்ச்சல் மற்றும் நெரிகட்டுதல் போன்றவையும் நேரிடுகின்றன.

Advertisement

Advertisement

காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோருக்கு உடலில் இதுபோன்ற பூச்சிக்கடி அடையாளம் இருக்கிறதா என சோதிக்கப்பட்டு பிறகு அவர்களுக்கு உரிய மருத்துவப் பரிசோதனைகள், சிகிச்சைகள் தொடங்கப்படுகின்றன. ஸ்கிரப் டைபஸ் என்று அழைக்கிறார்கள். இது புதிய நோயல்ல, பல காலமாக இந்த நோய் மக்களிடையே பரவி வருகிறது.

இந்த பாக்டீரியா உடலுக்குள் நுழைந்து உள்ளுறுப்புகளை செயலிழக்கச் செய்கின்றன. சிலருக்கு கல்லீரரையும், நுரையீரலையும் பாதிக்கிறது. ஒரு சிலருக்கு காய்ச்சல் மட்டும் இருக்கும். சோதனை செய்த பிறகே என்னென்ன பிரச்னைகள் என்பது தெரிய வரும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

மேலும், இந்த நோய்க்கு மருந்துகள் உள்ளன, இந்தக் காய்ச்சல் பாதித்திருப்பவர்களுக்கு உண்ணிக் காய்ச்சல்தான் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டால் எளிதாக குணப்படுத்திவிடலாம் என்கிறார்கள். ஒருவேளை, உடலுறுப்புகளில் பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தால், அதனை சரி செய்ய ஒரு சில நாள்கள் ஆகலாம், எனவே, மக்கள் யாரும் காய்ச்சல் என்றால் மருத்துவரை அணுகுவது அவசியம் என்கிறார்கள்.

மக்கள் அனைவரும் மூன்று அல்லது நான்கு நாள்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம். வேறெந்த நோய்களையும் போலவே உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால்தான் இந்த உண்ணிக் காய்ச்சலால் அபாயம் ஏற்படும். தவிர, உரிய நேரத்தில் சிகிச்சை பெற்றால் இது குணப்படுத்தக்கூடிய நோய்தான்.

தலைவலி, உடல் சோர்வு போன்ற பொதுவாக அனைத்து காய்ச்சலுக்கான அறிகுறிகள்தான் உண்ணிக் காய்ச்சலுக்கான அறிகுறிகளாக உள்ளன. எனவே, இதற்கு தனியாக அறிகுறிகள் தெரிவதில்லை.

புயல் வெளி, செடிகள் அருகே செல்லும்போது கவனமாக இருக்கலாம். தோட்டம் போன்ற பகுதிகளில் நடக்கும் போது பூச்சி கடித்தாலும் கவனமாக இருக்க வேண்டும். வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் இந்தப் பூச்சிக் கடிகளால் உருவாகும் உண்ணிக் காய்ச்சல் பரவுவதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன்தான் இருக்க வேண்டும். நான் செடி பக்கத்திலேயே செல்லவில்லையே, வீட்டை விட்டு வெளியேறவே இல்லையே என்றாலும் உண்ணிக் காய்ச்சல் வருகிறது. எனவே மூன்று நாள்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் எச்சரிக்கையுடன் செயல்படவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments