FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

2G வழக்கு: தில்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐயும் மேல்முறையீடு! 

2G அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் அ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து  சிபிஐ  தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

Updated On : 20 மார்ச் 2018, 3:18 pm IST
பகிர்:

புதுதில்லி: 2G அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் அ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து  சிபிஐ  தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறைச் செயலாளர் சித்தார்த் பெஹுரா, ராசாவின் தனிச் செயலாளராக இருந்த ஆர்.கே.சந்தோலியா உள்பட 14 பேர் மீதும், ஸ்வான் டெலிகாம், ரிலையன்ஸ் டெலிகாம், யூனிடெக் வயர்லெஸ் (தமிழ்நாடு) ஆகிய மூன்று தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ வழக்குத் தொடுத்தது.

இந்த வழக்கில் 2011, ஏப்ரலில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், விதிகளை மீறி தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 122 உரிமங்களை மத்திய தொலைத் தொடர்புத் துறை ஒதுக்கியதால், மத்திய அரசுக்கு ரூ.30,984 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று சிபிஐ குறிப்பிட்டிருந்தது.

Advertisement

Advertisement

மத்திய அமலாக்கத் துறை தொடுத்துள்ள வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ராசா, கனிமொழி, சரத்குமார், ஷாஹித் பால்வா, வினோத் கோயங்கா, ஆசிஃப் பால்வா, ராஜீவ் அகர்வால், கரீம் மொரானி, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்பட 10 பேர் மீதும், ஒன்பது தனியார் நிறுவனங்கள் மீதும் 2014, ஏப்ரலில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

நீண்ட விசாரணைகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் 21-ஆம் தேதி தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி இந்த வழக்கில் தீர்ப்பளித்தார். அவர் அளித்த தீர்ப்பில், சிபிஐ, மத்திய அமலாக்கத் துறை ஆகியவை தொடுத்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட

ஆ. ராசா, கனிமொழி உட்பட 14 பேரும் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பளித்தார்.

குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டது என்று தெரிவித்துள்ள நீதிபதி ஓ.பி. சைனீ, 2ஜி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த 3 நிறுவனங்களையும் விடுவித்து தீர்ப்பளித்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் அ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் திங்களன்று மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவானது இந்த வார இறுதியில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.

தற்பொழுது அமலாக்கத்துறையினைத் தொடர்ந்து 2G அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் அ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐயும்  தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments