கர்நாடக முதல்வராக நாளை காலை 11 மணிக்கு பதவியேற்கிறார் பொம்மை
பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நடைபெற்ற ஆலோசனையில் பசவராஜ் பொம்மை முதல்வராக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாளை காலை பதவியேற்க ஆளுநர் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கர்நாடக முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள பசவராஜ் பொம்மை நாளை காலை 11 மணிக்கு பதவியேற்கவுள்ளார்.
பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நடைபெற்ற ஆலோசனையில் பசவராஜ் பொம்மை முதல்வராக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாளை காலை பதவியேற்க ஆளுநர் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கர்நாடகத்தில் பாஜக அரசு பதவியேற்று நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், முதல்வர் எடியூரப்பா ஆளுநரை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கினார்.
இதையடுத்து அடுத்த முதல்வரை தேர்வு செய்ய பாஜக சார்பில் அனுப்பிவைக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் மற்றும் கிஷன் ரெட்டி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
இதில் கர்நாடக அமைச்சர்கள், பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனையில் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த எடியூரப்பாவும் கலந்துகொண்டார்.
இந்த ஆலோசனையின் இறுதியில் பசவராஜ் பொம்மையை கர்நாடக முதல்வராக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.