FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தை பிறந்தால் வழி பிறக்கும்: தமிழில் வாழ்த்துச் சொன்ன பிரதமர் மோடி

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று  தமிழில் பொங்கல் வாழ்த்துச் சொல்லி, பிரதமர் நரேந்திர மோடி தனது உரையைத் தொடங்கினார்.

1 பிப்ரவரி 2024, 1:36 pm IST
தை பிறந்தால் வழி பிறக்கும்: தமிழில் வாழ்த்துச் சொன்ன பிரதமர் மோடி
பகிர்:


புது தில்லி: தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகளை காணொலி வாயிலாக திறந்துவைக்கும் நிகழ்ச்சியில், தை பிறந்தால் வழி பிறக்கும் என்று  தமிழில் பொங்கல் வாழ்த்துச் சொல்லி, பிரதமர் நரேந்திர மோடி தனது உரையைத் தொடங்கினார்.

தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளையும், செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் மோடி இன்று நடைபெற்ற காணொலி வாயிலான நிகழ்ச்சியில் தொடக்கிவைத்தார்.

இதையும் படிக்க.. கரோனா அச்சமா? இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாமே

இன்று திறந்துவைக்கப்பட்டுள்ள புதிய மருத்துவக் கல்லூரிகள் ரூ.4,000 கோடி மதிப்பீட்டு செலவில் கட்டப்பட்டுள்ளன. இதில் ரூ.2,145 கோடி மத்திய அரசாலும் எஞ்சியத் தொகை தமிழ்நாடு அரசாலும் வழங்கப்பட்டது. விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஒரே நாளில் ஒரே மாநிலத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படுவது தமிழ்நாட்டில்தான். தேசியக் கல்விக் கொள்கையில் தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் உத்தரப்பிரதேசத்தில் ஒரே நாளில் 9 மருத்துவக் கல்லூரிகளை திறந்துவைத்தேன். நானே என் சாதனைகளை விஞ்சும் வகையில் தற்போது 11  மருத்துவக் கல்லூரிகளை திறந்துவைத்துள்ளேன்.

கடந்த 2014ஆம் ஆண்டில் மருத்துவக் கல்வி இடங்கள் 82,000 ஆக இருந்த நிலையில், தற்போது அது ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. 2014ஆம் ஆண்டில் நாட்டில் 7 எய்ம்ஸ் மருத்துவமனைகள் இருந்த நிலையில் தற்போது 22 ஆக உயர்ந்துள்ளது. 

பாஜக ஆட்சிக்கு வரும்போது நாட்டில் 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. ஆனால் தற்போது அது 596 ஆக அதிகரித்துள்ளது என்று கூறினார்.

அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் மருத்துவ திட்டங்களுக்கு 300 கோடி நிதிஉதவி அளிக்கப்படும். சுகாதாரத் துறையில் அதிகக் கவனம் செலுத்தப்பட கரோனா தொற்றுப் பரவலும் ஒரு காரணம் என்றார்.

முன்னதாக, தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தமிழக மக்களுக்கு தமிழில் பொங்கல் வாழ்த்துகளை பிரதமர் மோடி தெரிவித்துக் கொண்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments