FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

'ஆறு மாதத்துக்கு வாடகை இல்லை; ஒரு ஆண்டுக்கு முழு பாதுகாப்பு'

ஆறு மாதங்களுக்கு வாடகை இல்லாமல் மாளிகை வீடு, ஒரு ஆண்டுக்கு 24x7 நேரமும் பாதுகாப்பு வழங்கும் வகையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கான சட்டப்பிரிவு, 1959-ல் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது.

Updated On : 24 ஆகஸ்ட் 2022, 5:34 pm IST
கோப்புப் படம்
பகிர்:

புது தில்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வுபெறுவோருக்கு ஆறு மாதங்களுக்கு வாடகை இல்லாமல் மாளிகை வீடு, ஒரு ஆண்டுக்கு 24x7 நேரமும் பாதுகாப்பு வழங்கும் வகையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கான சட்டப்பிரிவு, 1959-ல் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது.

மத்திய அரசு செவ்வாயன்று செய்த திருத்தங்களில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வுபெறும் நாளிலிருந்து ஓராண்டுக்கு வாகன ஓட்டுநர் மற்றும் உதவியாளர் ஒருவரை அரசுச் செலவில் அமர்த்திக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை வெளியிட்டிருக்கும் திருத்தம் குறித்த அறிவிக்கையில், ஓய்வுபெறும் நீதிபதிகளுக்கு உச்ச நீதிமன்றம் அல்லது அந்தந்த உயர் நீதிமன்றங்கள் ஓட்டுநர் மற்றும் உதவியாளரை ஓராண்டு காலத்துக்கு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஆகஸ்ட் 26ஆம் தேதி ஓய்வுபெறவிருக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணாவுக்கு வாடகை இல்லாமல் வீடு மற்றும் பாதுகாப்பு வசதியும் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கும் இவ்விரு வசதிகளும் வழங்கப்படும்.

ஏற்கனவே, அயோத்தியா வழக்கில் தீர்ப்பளித்த முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் முழு நேர பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments