FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

எதிர்க்கட்சி குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹ

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 21 ஜூன் 2022, 11:40 pm IST
முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹ
பகிர்:

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

திரிணமுல் காங்கிரஸில் இணைந்து செயல்பட்டு வந்த யஷ்வந்த் சின்ஹ, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை, தேசிய நலன் கருதி, கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

இதையும் படிக்க | யஷ்வந்த் சின்ஹ யார்? - முழு விவரம்

Advertisement

Advertisement

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடப் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹ பெயரைத் திரிணமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பரிந்துரைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு பிறகு குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹ ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் வாய்ப்பை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஜம்மு - காஷ்மீர்  தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பாரூக் அப்துல்லா, மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோர் மருத்துவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments