இந்தியா

அக்னிபத் திட்டத்தின் மூலம் இளைஞர்களின் கனவுகளை சிதைத்துள்ளது பாஜக: ராகுல் காந்தி

நாட்டைக் காக்க வேண்டும் என்ற கனவுடன் இருந்த இளைஞர்களின் கனவுகளை அக்னிபத் திட்டத்தின் மூலம் பாஜக சிதைத்துள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

DIN

அக்னிபத் திட்டத்தின் மூலம் இளைஞர்களின் கனவுகளை பாஜக சிதைத்துள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு நவம்.25-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆட்சியைத் தக்கவைக்க காங்கிரஸ் கட்சியும், ஆட்சியைக் கைப்பற்ற பாஜகவும் கடுமையாக மோதி வருகின்றன.

தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்தவகையில் ராஜஸ்தானின் தோல்பூரில் இன்று (நவ.22) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது, “நாட்டின் வளங்கள் எவ்வாறு பகிரப்பட்டுள்ளன என்று தெரிந்துகொள்வது அவசியமாகும். அந்த வகையில் தலித் மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அதிகாரம் எவ்வளவு அளிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்துகொள்வதற்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் அவசியமாகும். 

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். அதைத் தொடர்ந்து மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் தேசிய அளவிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். 

முன்பு தன்னை ஓபிசி என அடையாளப்படுத்தி வந்தார் பிரதமர் மோடி. நான் ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்த தொடங்கியபின்பு தற்போது நாட்டில் ஏழை என்ற ஒரே ஜாதி மட்டுமே இருப்பதாக மாற்றிப் பேசி வருகிறார்.

கோடிக்கணக்கில் நிரந்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த பாஜக இருக்கும் வேலைவாய்ப்புகளையும் குறைத்து வருகிறது. 

நாட்டைக் காப்பதற்காக கனவுடன் இருந்த இளைஞர்களின் கனவுகளை அக்னிபத் திட்டத்தின் மூலம் பாஜக சிதைத்துள்ளது.” என்று ராகுல் காந்தி பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

SCROLL FOR NEXT