FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

'பிகாரில் ஹலால் பொருள்களைத் தடை செய்ய வேண்டும்' : மத்திய அமைச்சர்!

பிகாரில், ஹலால் சான்றிதழ் பெற்ற பொருள்களை தடைசெய்ய வேண்டும் என அமைச்சர் கிரிராஜ்சிங் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

Updated On : 23 நவம்பர் 2023, 2:43 pm IST
அமைச்சர் கிரிராஜ் சிங்
பகிர்:

பிகாரில் ஹலால் பொருள்களைத் தடை செய்யுமாறு பிகார் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங். பா.ஜ.கவைச் சேர்ந்த அமைச்சர் கிரிராஜ், ஹலால் சான்றிதல் பெற்ற பொருள்களின் விற்பனை, வணிகத்தை இஸ்மாமியமாக்கும் முயற்சி எனக் கூறியுள்ளார்.  

மேலும், தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் நிதிஷ் குமாருக்கு எழுதிய கடிதத்தைப் பகிர்ந்த அவர், உத்தரப் பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யானந்தை எடுத்துக்காட்டாகக்கொண்டு பிகாரிலும் ஹலால் பொருள்களைத் தடை செய்யுமாறு கூறியுள்ளார். 

மேலும் வீடியோ பதிவு ஒன்றில் தன் கருத்தை வெளிப்படுத்திய கிரிராஜ், ஹலால் சான்று அளிக்கப்பட்ட பொருள்களை விற்பனை செய்வது, இடைக்காலத்தில் இஸ்லாமியர் அல்லாத மக்களுக்கு விதிக்கப்பட்ட  ஜிஸ்யா வரியைப் போன்றது எனக் கூறியுள்ளார்.   

Advertisement

Advertisement

மேலும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள் இதைப் பொறுத்துக்கொண்டதற்குக் காரணம் ஓட்டு வாங்குவதற்காக மட்டுமே. பிகாரின் மூலை முடுக்குகளிலும் ஹலால் பொருள்கள் விற்கப்படுவதற்கு 'துக்டே துக்டே' கும்பல்தான் காரணம் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்துமதக் கோட்பாடுகளை வைத்து பொருள்களை விற்பனை செய்வது போலத்தான், இஸ்லாமிய கோட்பாடுளின் பெயரில் இந்த ஹலால் சான்றிதழ் மூலம் பொருள்களை விற்பனை செய்வதும் எனக் கூறியுள்ளார். மேலும் இதனால் சனாதன தர்மம் தாக்கப்படுகிறது எனவும் இந்த விற்பனைகளால் அனைவரும் இஸ்லாமிய வாழ்க்கை முறைப்படி வாழ வழிவகை செய்யப்படுகிறது எனவும் கூறியுள்ளார்.

இதற்கு பதலளித்த முதலமைச்சரின் தலைமை செய்தித் தொடர்பாளர், பா.ஜ.க மாட்டுக்கறி மாதிரியான விஷயங்களில் பாசாங்கு செய்கிறது என்றார். பா.ஜ.க தன்னை சனாதன தர்மத்தின் மிகப்பெரும் பாதுகாவலன் போல பாவித்துக்கொள்கிறது. ஆனால் உத்தரபிரதேசம் மாதிரியான மாநிலங்களில் உள்ள பா.ஜ.க தலைவர்கள்தான் அதிக அளவில் மாட்டு இறைச்சியை ஏற்றுமதி செய்துகொண்டிருக்கிறார்கள் எனக் கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments