FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பாஜக முக்கியத் தலைவர்களின் 3 மாதப் பயணச் செலவு ரூ. 168.9 கோடி!

மக்களவைத் தேர்தலின்போது பாஜக செலவினம் குறித்த அறிக்கை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி 2025, 4:48 pm IST
மத்திய அமைச்சர் அமித் ஷா - பிரதமர் நரேந்திர மோடி - கோப்புப் படம்
பகிர்:

மக்களவைத் தேர்தலின்போது பாஜக செலவினம் குறித்த அறிக்கை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் ஜூன் வரையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவின் செலவினங்கள் குறித்த அறிக்கையை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற பாஜக, தேர்தலுக்காக ரூ. 1,737.68 கோடி செலவிட்டுள்ளது.

இதில், பிரசாரத்துக்காக மட்டும் ரூ. 884.45 கோடி செலவிடப்பட்டுள்ளது. மேலும், பாஜக வேட்பாளர்கள் தொடர்பான செலவுகளுக்கு ரூ. 853.23 கோடியும், வேட்பாளர்களின் தனிப்பட்ட செலவுகளுக்கு ரூ. 245.29 கோடியும் செலவு செய்துள்ளது.

Advertisement

Advertisement

பாஜகவின் ஊடக விளம்பரத்துக்காக செலவிட்ட ரூ. 611.50 கோடியில், கூகுள் மூலமான விளம்பரங்களுக்காக கூகுள் இந்தியாவுக்கு ரூ. 156.95 கோடியும், முகநூல் விளம்பரங்களுக்கு ரூ. 24.63 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. இதுதவிர, சுவரொட்டிகள், பதாகைகள், விளம்பரப் பலகைகள், கட்சிக் கொடிகள் போன்ற விளம்பரப் பொருள்களுக்காக ரூ. 55.75 கோடி செலவிட்டுள்ளது.

நட்சரத்திர பிரசாரப் பேச்சாளர்களான பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டவர்கள் பங்கேற்கும் பிரசாரத்தின் பயணச் செலவுகளுக்காக ரூ. 168.92 கோடியும், பாஜகவின் பிற தலைவர்களின் பயணச் செலவாக ரூ. 2.53 கோடியும் செலவிட்டுள்ளது.

பாஜகவின் செலவினத்தில் மூன்றில் ஒரு பங்காக வெறும் ரூ. 584.65 கோடி மட்டுமே காங்கிரஸ் செலவு செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments