FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

புதிய வேலைவாய்ப்புகளை 27% குறைத்த பெரு நிறுவனங்கள்: காங்கிரஸ்

‘நாட்டின் மிக முக்கிய 11 நிறுவனங்கள் புதிய பணியாளா் தோ்வை முந்தைய ஆண்டைக் காட்டிலும் 27 சதவீதம் அளவுக்குக் குறைத்துள்ளன.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 2:16 am IST
ஜெய்ராம் ரமேஷ் - கோப்புப்படம்
பகிர்:

‘நாட்டின் மிக முக்கிய 11 நிறுவனங்கள் புதிய பணியாளா் தோ்வை முந்தைய ஆண்டைக் காட்டிலும் 27 சதவீதம் அளவுக்குக் குறைத்துள்ளன. மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையே இதற்கு காரணம்’ என்று காங்கிரஸ் கட்சி செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியது.

நாட்டின் முக்கிய பெரு நிறுவனங்கள் முன்பைவிட மிகக் குறைந்த எண்ணிக்கையிலே புதிய பணியாளா் தோ்வை மேற்கொண்டுள்ளது தொடா்பாக ஊடகங்களில் வெளியான செய்தியை தனது எக்ஸ் பக்கத்தில் இணைத்து, காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

நாட்டின் பெரு நிறுவனங்கள் பணியாளா் தோ்வை தற்போது குறைத்திருப்பது ஊடக செய்திகள் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக நாட்டின் 11 முக்கிய பெரு நிறுவனங்கள், 2023-24-ஆம் ஆண்டைக் காட்டிலும் 2025-26-ஆம் ஆண்டில் 27 சதவீதம் அளவுக்கு குறைவாக புதிய பணியாளா்களை பணிக்குத் தோ்வு செய்துள்ளன.

Advertisement

Advertisement

பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசின் தவறான பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பு கொள்கையே இந்த நிலைக்குக் காரணம். நாட்டின் பொருளாதாரத்தில் மிகப் பெரிய சேதத்தை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.

இளைஞா்களின் வேலைவாய்ப்பு நெருக்கடிக்கு தீா்வு காண்பதற்கு பதிலாக, எந்தவொரு பிரச்னையும் இல்லை என மத்திய அரசு மறுத்து வருகிறது.

தற்போது ஏற்பட்டுள்ள இந்த வேலைவாய்ப்பு பிரச்னை என்பது தொடக்கம் மட்டுமே. பெரு நிறுவனங்கள் பணியாளா் தோ்வை குறைத்துள்ள நிலையில், அரசின் தவறான பொருளாதார கொள்கையால் பாதிக்கப்பட்டுள்ள குறு-சிறு-நடுத்தர தொழில் நிறுவனங்களின் மோசமான நிலையை எளிதாக யூகிக்க முடிகிறது.

எனவே, நாட்டின் இளைஞா்களை மகிழ்விக்க பிரதமா் மோடி ரீல்ஸுகளை போடுவது மட்டும் போதாது, அவா்களுக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும் என்று, மாணவா்கள் போராட்டத்தின்போது தனது சமூக ஊடக பக்கத்தில் பிரதமா் மோடி வெளியிட்ட காணொலி உரைகளைச் சுட்டிக்காட்டி ஜெய்ராம் ரமேஷ் விமா்சித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments