நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம்
நாசிக் மாவட்டத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது பற்றி....
நாசிக் மாவட்டத்திற்கு உட்பட்ட சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இது ரிக்டர் அளவில் 3.2 முதல் 3.5 ஆக பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட தகவல்களின்படி, உயிர்ச்சேதமோ அல்லது சொத்து சேதமோ எதுவும் ஏற்படவில்லை.
பெத் தாலுகாவில் உள்ள கோண்டே, போர்வத், தேவ்கான் மற்றும் பய்கான் ஆகிய பகுதிகளில் மாலை 4.52 மணிக்கு 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
Advertisement
Advertisement
அதற்கு முன்பாக, சுர்கானா மற்றும் பெத் தாலுகாக்களில் முறையே அதிகாலை 5.32 மணிக்கு 3.4 ரிக்டர் அளவிலும், நள்ளிரவு 12.05 மணிக்கு 3.5 ரிக்டர் அளவிலும் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டன.
பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ, வதந்திகளை நம்பவோ வேண்டாம் என்றும், தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
ஏற்கெனவே நாசிக் மாவட்டத்தில் ஜூலை 25, 26, 27, 28 மற்றும் ஆகஸ்ட் 6, 8, 10 ஆகிய தேதிகளிலும் நிலநடுக்க அதிர்வுகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tremors ranging from 3.2 to 3.5 magnitude were recorded in parts of north Maharashtra's Nashik district on Friday, officials said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.