FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

உச்ச நீதிமன்ற நீதிபதிபோல நடித்து பிணை பெற முயன்ற இடைத்தரகருக்கு 8 ஆண்டு சிறை!

இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறித்து...

உச்ச நீதிமன்ற நீதிபதிபோல நடித்து பிணை பெற முயன்ற இடைத்தரகருக்கு 8 ஆண்டு சிறை! - படம்: கோப்பிலிருந்து...
பகிர்:

உச்ச நீதிமன்ற நீதிபதிபோல நடித்து பிணை பெற முயன்ற இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தில்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஊழல் வழக்கு தொடர்பாக சந்திரசேகர் காவல் துறை காவலில் இருந்தபோது, 2017 ஏப்ரல் 28 அன்று செய்யப்பட்ட ஒரு தொலைபேசி அழைப்பிலிருந்து இந்த வழக்கு உருவானது.

வழக்குத் தரப்பின்படி, அவர் காவலர் மன்ஜீத்தின் கைப்பேசியை அணுகி, அதைப் பயன்படுத்தி, அப்போது ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிபதியாக இருந்த பூனம் சௌத்ரியின் அதிகாரப்பூர்வ தரைவழித் தொலைபேசி மற்றும் கைப்பேசியைத் தொடர்பு கொண்டார்.

Advertisement

Advertisement

விசாரணை நீதிமன்றம், இந்திய தண்டனைச் சட்டத்தின் 170 (அரசு ஊழியர்போல் ஆள்மாறாட்டம் செய்தல்), 189 (அரசு ஊழியருக்கு காயம் விளைவிப்பதாக அச்சுறுத்தல்) மற்றும் 507 (அடையாளம் தெரியாத தகவல் மூலம் குற்றவியல் மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் சந்திரசேகரைக் குற்றவாளி எனத் தீா்ப்பளித்ததுடன், அவரது குற்றத்தை நீதித் துறை செயல்முறையின் சுதந்திரத்திற்கும் புனிதத்திற்கும் ஒரு ‘நேரடி அவமதிப்பு‘ என்றும் விவரித்தது.

சந்திரசேகர் முதலில் அப்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதியின் தனிச் செயலாளராகவும், பின்னா் அந்த நீதிபதியாகவே ஆள்மாறாட்டம் செய்ததாகவும் விசாரணை நீதிமன்றம் கூறியது.

நீதி நிர்வாகத்தில் தலையிடும் நோக்கத்துடன் சந்திரசேகர் வேண்டுமென்றே உச்ச நீதிமன்ற நீதிபதியின் அடையாளத்தை எடுத்துக்கொண்டார் என்பதை அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது என்றும் அது தீர்ப்பளித்தது.

இதனிடையே, 2017 ஆம் ஆண்டு ஊழல் வழக்கில், சிறப்பு நீதிபதியிடம் பிணை பெறுவதற்காக உச்ச நீதிமன்ற நீதிபதிபோல் நடித்ததற்காக, தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, மோசடிக்காரர் எனக் கூறப்படும் சுகேஷ் சந்திரசேகர் தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பில், தனது குணநலன்கள் குறித்துக் கூறப்பட்ட ‘இழிவான, தரக்குறைவான, களங்கப்படுத்தும் மற்றும் தேவையற்ற கருத்துக்களை‘ நீக்க வேண்டும் என்று சந்திரசேகர் கோரினார்.

விசாரணை நீதிமன்றம், ‘தீர்ப்பளிப்பதற்கு முற்றிலும் தேவையற்ற‘ சொற்களால் தன்னை மீண்டும் மீண்டும் சித்தரித்துள்ளதாக அவா் தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், சுகேஷ் சந்திரசேகருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.

summary

A Delhi court has sentenced middleman Sukesh Chandrashekhar to eight years in prison for attempting to secure bail by impersonating a Supreme Court judge.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments