FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

40 நாள்களாகியும் நிரப்பப்படாத கர்நாடக அமைச்சரவை! முதல்வர் சிவகுமார் விரைவில் தில்லி பயணம்!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் சந்திப்பது குறித்து...

Updated On : 15 ஜூலை 2026, 5:07 pm IST
கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் - கோப்புப் படம்
பகிர்:

கர்நாடக அமைச்சரவையை விரிவாக்கம் செய்வது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை முதல்வர் டி.கே. சிவகுமார் விரைவில் சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கர்நாடகத்தில், காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைந்து இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் புதிய முதல்வராக டி.கே. சிவகுமார் கடந்த ஜூன் 3 அன்று பதவியேற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, முதல்வர் டி.கே. சிவகுமார் தலைமையிலான அரசு அமைந்து 40 நாள்களைக் கடந்துள்ள நிலையில் இதுவரை அமைச்சரவை முழுவதுமாக நிரப்பப்படவில்லை. பல்வேறு முக்கிய துறைகளின் அமைச்சரவை காலியாக இருப்பதால் மக்கள் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதுகுறித்து, காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியுடன் ஆலோசனை மேற்கொள்வதற்காக கர்நாடக முதல்வர் சிவகுமார் மற்றும் துணை முதல்வர் ஜி. பரமேஸ்வரா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வரும் சனிக்கிழமை (ஜூலை 18) தில்லி செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, ராகுல் காந்தியைச் சந்திக்க கடந்த ஜூலை 14 அன்று கர்நாடக தலைவர்கள் தில்லி செல்வார்கள் எனத் தகவல் வெளியான நிலையில், தற்போது மாற்றப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, புதிய அமைச்சரவையில் இடம்பெற கர்நாடகத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி. வேணுகோபாலை சந்திப்பதற்காக கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

summary

CM D.K. Shivakumar is set to meet Rahul Gandhi regarding the expansion of the Karnataka cabinet.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments