இந்திய இளைஞர்களுக்கு நீதி வேண்டும்! லாஸ் ஏஞ்சலீஸில் போராட்டம்!
இந்திய இளைஞர்களுக்கு ஆதரவாக லாஸ் ஏஞ்சலீஸில் போராட்டம் நடைபெறுவது பற்றி...
தில்லி போராட்டத்துக்கு ஆதரவாக கலிஃபோர்னியா லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் உள்ள இந்திய இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி கடந்த ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வந்த சிஜேபி இளைஞர்கள், ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினர்.
பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற இந்தப் பேரணியில், தில்லி காவல் துறையினர் நடத்திய தடியடி மற்றும் பெல்லட் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஏராளமான இளைஞர்கள் படுகாயமடைந்தனர்.
Advertisement
Advertisement
இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாகவும், நீட் தேர்வுக்கு எதிராகவும் சென்னை, மும்பை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்நிலையில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் இந்திய இளைஞர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறுகிறது.
'இந்திய இளைஞர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்' என்ற பதாகைகளுடன் அங்குள்ள இந்தியர்கள் கோஷமிட்டு பேரணி நடத்துகின்றனர்.
தில்லி போராட்டத்தில் இளைஞர்களை காவல்துறை தாக்கிய புகைப்படங்களையும் அவர்கள் கையில் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Justice for Indian youth: Protest in Los Angeles support cjp protest
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.