FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சிஜேபி போராட்டத்தில் தடியடி!காவல்துறையினருக்கே காயம் அதிகம்?

சிஜேபியினரின் பேரணியின்போது ஏற்பட்ட நெரிசலில் மாணவர்களை விட காவல்துறையினர் அதிகம் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிப்பது பற்றி...

Updated On : 25 ஜூலை 2026, 12:36 pm IST
சிஜேபி போராட்டம் - படம்: PTI
பகிர்:

சிஜேபியினரின் பேரணியின்போது ஏற்பட்ட நெரிசலில் மாணவர்களை விட காவல்துறையினர் அதிகம் காயமடைந்ததாக தில்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஜூன் 20 ஆம் தேதி முதல் தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராடி வருகின்றனர்.

போராட்டக் களமான ஜந்தர் மந்தரிலிருந்து கடந்த ஜூலை 20 ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற சிஜேபி ஆதரவாளர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதோடு கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். இதில் இரு தரப்பினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக, காவல்துறையின் செயலைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நெரிசல் நடைபெற்ற நாளன்று மாணவர்களை விட காவல்துறை அதிகாரிகள் அதிகம் காயமடைந்ததாக தில்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, 130 காவல்துறை அதிகாரிகள், 65 மாணவர்கள் காயமடைந்ததாகவும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக 15 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஜந்தர் மந்தர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 10,000 பேர் கூடி வருகின்றதாகவும் அங்கு சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிப்பதற்காக சுமார் 3,000 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து 25 நாள்களுக்கு மேல் உண்ணா விரதம் மேற்கொண்ட சோனம் வாங்சுக் அதனை வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

summary

Delhi Police sources state that more police personnel than students were injured in the crush that occurred during the CJP rally.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments