FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நீட் போராட்டம்: 4 மாதங்களாக ரஷியாவில் இருப்பவர் மீது வழக்குப்பதிவு! விடியோ வைரல்!

நீட் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, கடந்த 4 மாதங்களாக ரஷியாவில் இருப்பவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது பற்றி...

Updated On : 29 ஜூலை 2026, 6:10 pm IST
- கோப்புப் படம்
பகிர்:

நீட் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, கடந்த 4 மாதங்களாக ரஷியாவில் வசித்து வருபவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக அந்த நபர் பேசிய விடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக தில்லியின் ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. அவர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய கல்வித்துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

போராட்டத்தின் போது சிஜேபி ஆதரவாளர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதோடு, கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதன்பிறகு போராட்டம் நாடு முழுவதும் வெடித்தது. தர்மேந்திர பிரதானின் ராஜிநாமைவையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

Advertisement

Advertisement

இருப்பினும், நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான மக்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தன. இதையடுத்து, நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பங்கேற்ற குற்றப் பின்னணி இல்லாத 18 வயதுக்குக் குறைவான மாணவர்களை விடுதலை செய்யவும் அந்த வழக்குகளைத் திரும்பப் பெறவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், பிகாரின் கிஷன்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது சதாக்கத் என்ற நபர் பேசிய விடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.

அந்த விடியோவில், “கடந்த நான்கு மாதங்களாக ரஷியாவில் வசித்து வருகிறேன். எனவே, ஜூலை 25 அன்று பகதூர்கஞ்சில் நடந்த போராட்டத்தில் நான் கலந்துகொள்ளவில்லை. ஆனாலும், போராட்டத்தில் கலந்து கொண்டதாகக் குற்றம் சாட்டி, காவல்துறை என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுகுறித்து முறையான விசாரணை நடத்தி என்னுடைய பெயரை முதல் தகவல் அறிக்கையிலிருந்து நீக்க கோரிக்கை விடுக்கிறேன்” என்று முகமது சதாக்கத் தெரிவித்துள்ளார்.

கிஷன்கஞ்ச் மாவட்டத்தின் காவல் கணிகாணிப்பாளர் ஹரி மோகன் ஷுக்லாவை பிடிஐ செய்தி நிறுவனம் அணுகி, இது தொடர்பாக தகவல் கேட்டபோது, அவர் அதை மறுக்கவோ உறிதிப்படுத்தவோ இல்லை; மாறாக குறைகள் இருப்பவர்கள் காவல்துறையை அணுகலாம் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

summary

A video has gone viral in which a man claims that the police have registered a case against him for participating in the NEET protest, despite the fact that he has been living in Russia for the past four months.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments