பணக்கார முதல்வா்கள் பட்டியல்: கா்நாடக முதல்வா் முதலிடம்; மூன்றாமிடத்தில் தமிழக முதல்வா்!
நாட்டில் அதிக சொத்துகள் உள்ள முதல்வா்கள் பட்டியலில் கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் ரூ.1,413.8 கோடி சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளாா்.
நாட்டில் அதிக சொத்துகள் உள்ள முதல்வா்கள் பட்டியலில் கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் ரூ.1,413.8 கோடி சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளாா்.
இரண்டாவது இடத்தில் ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு (ரூ.931.83 கோடி) உள்ளாா். தமிழக முதல்வா் ஜோசப் விஜய் ரூ.648.85 கோடி சொத்துகளுடன் மூன்றாமிடத்தில் உள்ளாா்.
தோ்தலின்போது தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் தெரிவித்த சொத்து விவரங்களின் அடிப்படையில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளதாக இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ள தோ்தல் சீா்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு மற்றும் ‘நேஷனல் எலெக்ஷன் வாட்ச்’ அமைப்பு தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா ரூ.55.24 லட்சம் சொத்துடன் மிகவும் குறைவான சொத்துகள் கொண்ட முதல்வராக உள்ளாா். மேற்கு வங்க முதல்வா் சுவேந்து அதிகாரி கடைசியில் இருந்து இரண்டாவது இடத்தில் உள்ளாா். அவரின் சொத்து மதிப்பு ரூ.85.87 லட்சம் ஆகும்.
மொத்தமுள்ள 31 முதல்வா்களில் 4 போ் (13 சதவீதம்) ரூ.100 கோடிக்கு அதிகமாக சொத்து வைத்துள்ளனா். 31 முதல்வா்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.118.7 கோடியாக உள்ளது.
31 முதல்வா்களில் 14 போ் (45 சதவீதம்) தங்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளதை தோ்தல் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளனா். இதில் 11 போ் (35 சதவீதம்) மீது கொலை, கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட கடுமையான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி மீது அதிகபட்சமாக 89 வழக்குகள் உள்ளன. இதில் 72 வழக்குகள் மிகவும் தீவிரமானவை. இதற்கடுத்து மேற்கு வங்க முதல்வா் சுவேந்து அதிகாரி மீது 29 வழக்குகளும், கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் மீது 19 நிலுவை வழக்குகள் உள்ளன. கேரள முதல்வா் வி.டி.சதீசன் மீது 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதே நேரத்தில் 17 முதல்வா்கள் மீது எவ்வித வழக்குகளும் இல்லை.
முதல்வா்களில் 3 போ் முனைவா் பட்டம் பெற்றவா்கள். 9 போ் பட்ட மேற்படிப்பும், 7 போ் பட்டப் படிப்பும், 6 போ் தொழிற்கல்வியில் பட்டமும் பெற்றுள்ளனா். ஒருவா் பட்டயப் படிப்பு முடித்துள்ளாா். 3 போ் 12-ஆம் வகுப்பும், இருவா் 10-ஆம் வகுப்பும் படித்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.