உள்கட்சி மோதலால் டி.கே. சிவகுமாரின் அரசு விரைவில் கவிழும்! - ஜனதா தளம் விமர்சனம்!
கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரின் அரசு விரைவில் கவிழும் என மதச்சார்பற்ற ஜனதா தளம் விமர்சித்துள்ளது...
கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தலைமையிலான காங்கிரஸ் அரசு உள்கட்சி மோதலால் விரைவில் கவிழும் என மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மூத்த தலைவர் டி.ஏ. ஷரவணா விமர்சித்துள்ளார்.
கர்நாடகத்தின் புதிய முதல்வராக டி.கே. சிவகுமார் கடந்த ஜூன் 3 அன்று பதவியேற்றுக்கொண்டார். இதையடுத்து, அமைக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகளுக்கு மூத்த அமைச்சர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
இதில், நீர்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட ராமலிங்க ரெட்டி பதவியேற்ற 2 நாள்களில் ராஜிநாமா செய்தது கர்நாடகத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அமைச்சர் ராமலிங்க ரெட்டியின் ராஜிநாமாவை விமர்சித்து பேசிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் ஷரவணா, துறை ஒதுக்கீட்டில் முதல்வர் டி.கே. சிவகுமாருக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை எனவும், உள்கட்சி மோதலால் காங்கிரஸ் அரசு விரைவில் கவிழும் எனவும் விமர்சித்துள்ளார்.
இதுபற்றி, அவர் பேசியதாவது:
“சிவகுமாரும் அவருடைய அமைச்சரவையும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு கர்நாடகத்தில் எதிர்காலம் இல்லை. முதல்வர் சிவகுமாரின் ஆதரவாளர்கள் 2 பேருக்குக் கூட அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை. அவருடைய அரசு முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் கட்சித் தலைமையின் ரிமோட் கட்டுப்பாட்டில் இயங்குகிறது” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, அமைச்சர்களுக்குத் துறைகளை ஒதுக்குவது காங்கிரஸ் தலைமையின் முடிவு என முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியிருந்தது நினைவுக்கூரத்தக்கது.
Senior Janata Dal (Secular) leader Sharavana has criticized the Congress government led by Karnataka Chief Minister D.K. Shivakumar, stating that it will soon collapse due to internal infighting.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.