5 சிறுத்தைக்குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!
இந்தியாவில் புதிதாக 5 சிறுத்தைக்குட்டிகள் பிறந்துள்ளது குறித்து...
புதிதாக 5 சிறுத்தைக்குட்டிகள் பிறந்துள்ளதால் நாட்டின் மொத்த சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ள குனோ தேசியப் பூங்காவில், இந்தியாவில் பிறந்த 'KJP21' என்ற பெண் சிறுத்தை 5 ஆரோக்கியமான குட்டிகளை ஈன்றுள்ளது.
இதற்கு முன்பாக, 'முக்கி' (Mukhi) மற்றும் 'KGP12' ஆகிய சிறுத்தைகள் மட்டுமே இந்தியாவில் பிறந்து தங்களுடைய குட்டிகளை ஈன்ற நிலையில், அந்த வரிசையில் KJP21 சிறுத்தை மூன்றாவது இடத்தில் உள்ளது.
Advertisement
Advertisement
வனவிலங்கு மறுஅறிமுகத் திட்டமான 'புராஜெக்ட் சீட்டா' (Project Cheetah) திட்டத்தில் இது மிக முக்கிய மைல்கல்லாக உள்ளதாக மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்த ஐந்து குட்டிகளும் போட்ஸ்வானா நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட ஆண் சிறுத்தைக்கும் KJP21 என்ற இந்திய பெண் சிறுத்தைக்கும் பிறந்துள்ளது.
இதனால், நாட்டில் உள்ள மொத்த சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ள நிலையில், 41 சிறுத்தைகள் மட்டுமே இந்தியாவில் பிறந்தது குறிப்பிடத்தக்கது.
With the birth of five new leopard cubs, the country's total leopard population has risen to 60.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.