பிரிட்டன் சாலைகளில் ஓடும் ஆட்டோ! ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த விடியோ!
பிரிட்டன் சாலைகளில் ஆட்டோக்கள் ஓடும் விடியோவை ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ளது பற்றி..
பிரிட்டன் சாலைகளில் அதிநவீன வகையான கார்களும் சொகுசு கார்களும் ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்திருப்பார்கள். ஆனால், இந்தியாவின் மிக முக்கிய போக்குவரத்து சாதனமான ஆட்டோ வளைந்து நெளிந்து ஓடிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் பலரும் ஆச்சரியப்படுவார்கள்.
அதுபோன்றதொரு விடியோவைத்தான் இந்திய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு ஆச்சரியத்தை அளித்துள்ளார்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் மக்களின் அன்றாட வாழ்விலிருந்து பிரிக்க முடியாத அங்கமாக இருப்பது ஆட்டோ ரிக்சாக்கள். எவ்வளவு நெரிசலான சாலையிலும் புகுந்து புகுந்து சென்று விடும் என்பதால், சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டுவார்கள் என்ற சொல் வழக்கமே சென்னையில் உள்ளது.
Advertisement
Advertisement
அதுபோன்றதொரு மூன்று சக்கர ஆட்டோ, பிரிட்டன் நகரின் சாலைகளில் ஓடும் விடியோவை ஆனந்த் மஹிந்திரா பகிர, அது வைரலாகியிருக்கிறது.
இதற்கு இந்தியர்கள் பலரும் மிகவும் நகைச்சுவையான கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள். அதில் ஒருவர், பிரிட்டனில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களிடமாவது, இன்டிகேட்டர் போட்டுவிட்டு திரும்பவும், எந்தப் பக்கம் இன்டிகேட்டர் போடுகிறார்களோ தயவு செய்த அந்தப் பக்கம் மட்டும் திரும்பவும் கேட்டுக் கொள்ளுங்கள் என்று மிகவும் யதார்த்தமாகக் கூறியிருக்கிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.