மக்களின் முதுகெலும்பை முறிக்கும் மோடி! ரெப்போ வட்டி உயர்வுக்கு காங்கிரஸ் கண்டனம்!
ரெப்போ வட்டி விகிதம் உயர்வுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்திருப்பது பற்றி...
ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி, மக்களின் முதுகெலும்பை மேலும் பிரதமர் மோடி முறிப்பதாக காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
மும்பையில் ஆா்பிஐ ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் நடைபெற்ற அக்டோபர் மாதத்துக்கான ஆா்பிஐ நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்தில், வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி (ரெப்போ ரேட்) விகிதத்தை 0.25% உயர்த்தி, 5.50 ஆக நிர்ணயித்துள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
Advertisement
Advertisement
”பணவீக்க நாயகன் மோடியின் கொடூர ஆட்சி தொடர்கிறது. மக்களின் முதுகெலும்பை மேலும் முறிக்கும் வகையில் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரிசர்வ் வங்கி இன்று 'ரெப்போ' வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தி 5.5 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.
இதன் விளைவாக, உங்கள் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் மற்றும் வணிகக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் இனி அதிகரிக்கும்.
இனி நீங்கள் அதிகத் தவணைத் தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும்; அத்துடன் கடன் திருப்பிச் செலுத்தும் காலமும் நீட்டிக்கப்படும்.
'நல்ல நாள்கள்' வரும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் நமக்குக் கிடைத்ததோ கொள்ளையடிக்கும் நாள்கள்தான்” எனத் தெரிவித்துள்ளது.
Modi is breaking the people's back - Congress condemns the hike in repo rates
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.