FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

உச்சநீதிமன்றத்தை நோக்கி நாளை பேரணி செல்வோம்: ராகுல் காந்தி அழைப்பு!

தில்லியில் உச்சநீதிமன்றத்தை நோக்கி நாளை பேரணி செல்ல ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

56 வினாடிகள் முன்பு
உச்சநீதிமன்றத்தை நோக்கி நாளை பேரணி செல்ல ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
பகிர்:

தில்லியில் உச்சநீதிமன்றத்தை நோக்கி நாளை பேரணி செல்ல ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சி (சிஜேபி) போராட்டம் நடத்தி வருகிறது. இதில் கலந்துகொண்ட இளைஞர்கள், மாணவர்கள், வழக்கறிஞர்கள், செய்தியாளர்கள் என பலரும் தில்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள விமானத்தில் தில்லி சென்ற சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே உள்பட அக்கட்சியின் 3 முக்கிய தலைவர்களை விமானத்தில் வைத்தே தில்லி காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். அவர்கள் தாமதமாக விடுதலை செய்யப்பட்டனர்.

Advertisement

Advertisement

போராட்டத்தில் ஈடுபட்ட பலர் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தை நோக்கி நாளை பேரணி செல்ல மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

சமூக ஊடகங்களில் அவர் வெளியிட்ட பதிவில், “அமைதியான முறையில் போராட்டம் நடத்த தில்லியில் நேற்று இளைஞர்கள் திரண்டனர். அவர்கள் வெறுப்பையோ கோபத்தையோ அல்லாமல் அன்பை மட்டுமே தங்களின் இதயங்களில் சுமந்து வந்தனர். ஆனால், அவர்கள் பாஜக குண்டர்களாலும் காவல்துறையினராலும் தாக்கப்பட்டனர்.

இது நாம் விரும்பும் இந்தியா அல்ல.

கட்சி, பாலினம், சாதி, சமூகம் மற்றும் மாநில எல்லைகளைக் கடந்து இந்தியர்களாக ஒன்றிணைந்து நாளை உச்சநீதிமன்றத்தை நோக்கி நாம் பேரணி செல்வோம்.

இளைஞர்கள், அனைத்து எதிர்க்கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் ஜனநாயகத்தின் மீதும் இந்திய அரசியலமைப்பின் மீதும் நம்பிக்கை கொண்ட அனைவரும் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.

வாக்குத் திருட்டை முடிவுக்குக் கொண்டுவருதல், சிறப்புத் தீவிரத் திருத்தத்தை நிறுத்துதல், ஞானேஷ் குமார் பதவி விலகுதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, நமது நாட்டின் சார்பாகத் தலைமை நீதிபதியிடம் நாம் ஒரு மனுவைச் சமர்ப்பிப்போம்.

நரேந்திர மோடி, அமித் ஷா, அஜித் தோவல் மற்றும் மோகன் பகவத் ஆகியோரால் இந்தியாவின் குரலை ஒருபோதும் ஒடுக்க முடியாது. இந்த கோழைகளால் நம்மை அச்சுறுத்த முடியாது. அவர்கள் ஒதுங்கிச் செல்லவேண்டும்.

அன்பு, சகோதரத்துவம் மற்றும் தேசபக்தியுடன் ஒன்றிணைந்து நாம் பேரணி செல்வோம்.

அஞ்சாதீர்கள்.

நாளை, இந்தியா முழுவதும் உச்ச நீதிமன்றத்தை நோக்கிப் பேரணி செல்லும்” எனத் தெரிவித்துள்ளார்.

summary

Rahul Gandhi has called for a march towards the Supreme Court in Delhi tomorrow.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments