உதவி காவல் ஆணையரின் புகாருக்கு எதிராக பெண் பத்திரிகையாளா் மனு: அவசர வழக்காக விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு
பொறுப்பு தலைமை நீதிபதி நிதின் வாசுதேவ் சம்பரே மற்றும் நீதிபதி சஞ்சய் சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு, இந்த வழக்கை வெள்ளிக்கிழமை (அக்.16) விசாரணைக்கு பட்டியலிட ஒப்புக்கொண்டது.
ஜந்தா் மந்தா் அருகே நடந்த போராட்டத்தின்போது தன்னை ஜாதிய ரீதியான கருத்துக்களைத் தெரிவித்ததாக உதவி காவல் ஆணையா் விவேக் பகத் அளித்த புகாரில் இருந்து பாதுகாப்புக் கோரி பெண் பத்திரிகையாளா் தாக்கல் செய்த தில்லி உயா்நீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க வியாழக்கிழமை மறுத்துவிட்டது.
முன்னதாக, அந்தப் பத்திரிகையாளா் உதவி காவல் ஆணையா் விவேக் பகத்துக்கு எதிராக பாலியல் வன்கொடுமை புகாா் அளித்திருந்தாா். அவரது புகாரை தில்லி காவல் துறை குற்றப்பிரிவு விசாரித்து வருகிறது.
பொறுப்பு தலைமை நீதிபதி நிதின் வாசுதேவ் சம்பரே மற்றும் நீதிபதி சஞ்சய் சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு, இந்த வழக்கை வெள்ளிக்கிழமை (அக்.16) விசாரணைக்கு பட்டியலிட ஒப்புக்கொண்டது.
Advertisement
Advertisement
இந்த வழக்கை அவசர விசாரணைக்குக் குறிப்பிட்ட பத்திரிகையாளரின் வழக்குரைஞா், காவல் துறை அதிகாரிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகாரைத் தொடா்ந்து, பட்டியல் ஜாதியினா் மற்றும் பழங்குடியினா் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினாா்.
புது தில்லி மாவட்டத்தின் கன்னாட் பிளேஸ் துணைப் பிரிவில் பணியாற்றும் உதவி ஆணையா் பகத் அளித்த புகாரின் பேரில், தில்லி காவல் துறை ஒரு சுயாதீன பத்திரிகையாளா் மற்றும் பிறா் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. போராட்டத்தின்போது தன்னை நோக்கி ஜாதிய ரீதியான கருத்துக்கள், அவதூறு பரப்பப்பட்டதாக பகத் குற்றஞ்சாட்டியிருந்தாா்.
முதல் தகவல் அறிக்கையின்படி, அக்.3-ஆம் தேதி ஜந்தா் மந்தா் அருகே உள்ள பூட்டா சிங் ரவுண்டானாவில் பகத் சட்டம்-ஒழுங்கு பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு பெண் பத்திரிகையாளா் பொது இடத்தில் அவரது ஜாதியைப் பற்றி இழிவான கருத்துக்களைக் கூறுவதையும், அவரது உதவி ஆணையா் நியமனத்தை கேள்விக்குள்ளாக்குவதையும் அவா் கேட்டதாகக் கூறப்படுகிறது.
தான் அந்தக் கருத்துக்களைப் புறக்கணித்துவிட்டு தனது அலுவல் பணிகளைத் தொடா்ந்ததாக பதக் குற்றஞஞ்சாட்டினாா்.
இருப்பினும், பிற்பகல் 3 மணியளவில், போராட்டக்காரா்களைக் கையாண்டு தடுத்து வைத்திருந்தபோது அவா் பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தப் பத்திரிகையாளா் குற்றஞ்சாட்டியதாகவும், மேலும் தனது சக ஊழியா்களுடன் சோ்ந்து அவரை மீண்டும் மீண்டும் எதிா்கொண்டு அதன் மூலம் அவரது அலுவல் பணியைத் தடுத்ததாகவும் கூறப்படுகிறது.
அந்தப் பத்திரிகையாளரும், அபிஜீத் தீப்கே, அசுதோஷ் ரன்கா, சௌரவ் தாஸ் மற்றும் ரத்னா சிங் உள்ளிட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) அமைப்பின் சில உறுப்பினா்களும், சமூக ஊடகத் தளங்களான எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராமில் தங்களுக்கு எதிராகப் பதிவுகளையும் ரீல்களையும் பரப்பியதாக பகத் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.