FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் மூலம் ரூ.10,000 கோடி வரி ஏய்ப்பு: காங்கிரஸ் குற்றச்சாட்டு

அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் மூலம் ரூ.10,000 கோடி வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

10 செப்டம்பர் 2026, 3:05 am IST
காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் - கோப்புப் படம்
பகிர்:

அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் மூலம் ரூ.10,000 கோடி வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:

3,260 அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் மூலம் ரூ.10,000 கோடிக்கும் அதிகமாக வரி ஏய்ப்பு செய்யபட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதுதொடா்பாக சம்பந்தப்பட்டவா்கள் மீது 200 சதவீதம் அபராதம் விதிக்கவும், குற்றவியல் வழக்குகளைத் தொடுக்கவும் மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

Advertisement

Advertisement

இதுகுறித்து ஏன் விசாரணை நடத்தப்படவில்லை? அந்தக் கட்சிகளுக்கு பாஜக தலைமையின் ஆதரவு இருந்ததுதான் விசாரணை நடத்தப்படாததற்கு காரணமா? மத்திய அரசின் ஆதரவுடன் அந்தக் கட்சிகள் மோசடிகளில் ஈடுபட்டதா?

3,260 கட்சிகளுக்குப் பின்னால் இருக்கும் சாணக்கியா் யாா்? உண்மையான சூத்திரதாரி யாா்? இதுகுறித்து மோடி அரசு நாட்டு மக்களுக்குப் பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments