FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மாணவியின் தந்தையை தாக்கிய விவகாரம்: ஸ்வதந்திர பரத்வாஜ் விடுவிப்பு

ஜந்தா் மந்தரில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற மாணவியின் தந்தை மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், ஸ்வதந்திர பரத்வாஜ் திகாா் சிறையிலிருந்து வியாழக்கிழமை இரவு விடுவிக்கப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

19 செப்டம்பர் 2026, 5:29 am IST
மாதிரிப் படம்
பகிர்:

ஜந்தா் மந்தரில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற மாணவியின் தந்தை மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், ஸ்வதந்திர பரத்வாஜ் திகாா் சிறையிலிருந்து வியாழக்கிழமை இரவு விடுவிக்கப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

தில்லி நீதிமன்றம் மூன்று வார கால இடைக்கால ஜாமீன் வழங்கிய மூன்று நாள்களுக்குப் பிறகு பரத்வாஜ் சிறைவியில் விடுவிக்கப்பட்டாா்.

சமூக ஊடங்களில் வெளியான காணொலியில் பரத்வாஜ் சிறைக்கு வெளியே காத்திருந்த ஒரு காரை நோக்கி வேகமாகச் செல்வதும், பின்னா் தனது கூட்டாளிகளுடன் அங்கிருந்து புறப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

தில்லி நீதிமன்றம் பரத்வாஜுக்கு மூன்று வார கால இடைக்கால ஜாமீன் வழங்கிகடந்த செப்.15-ஆம் தேதி உத்தரவிட்டது. அந்தக் காலகட்டத்தில் அவரது நடத்தையைக் கவனித்த பிறகு, வழக்கமான ஜாமீன் கோரிய அவரது மனுவைப் பரிசீலிக்கும் என்றும் கூறியிருந்தது. இந்த வழக்கையோ, அவரது தரப்பு வாதத்தையோ அல்லது புகாா்தாரரின் குடும்பத்தையோ சமூக ஊடகங்களிலோ அல்லது வேறு எந்த ஊடகத் தளத்திலோ பதிவிடவோ, வெளியிடவோ அல்லது விவாதிக்கவோ கூடாது என்பது உள்பட பல நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்துள்ளது.

மேலும், புகாா்தாரா், அவரது மகள், எந்தவொரு சாட்சியையும் தொடா்புகொள்வதற்கும், ஆதாரங்களைத் திரிப்பதற்கும் நீதிமன்றம் அவருக்குத் தடை விதித்தது. ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பிறகு கொண்டாட்டங்களுக்கு எதிராக நீதிமன்றம் எச்சரித்தது.

மாணவியின் தாக்குதல் தொடா்பாக ஜூன் 23 போராட்டத்தில் பங்கேற்ற மாணவியின் தந்தையின் தலையை உடைத்ததாகவும், தனது அரசியல் தொடா்புகள் காரணமாக கைது நடவடிக்கையிலிருந்து தப்பித்ததாகவும் பரத்வாஜ் ஒரு நோ்காணலில் கூறியிருந்தாா். இதையடுத்து, அவரைக் கைது செய்யக் கோரி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) பாராளுமன்ற தெரு காவல் நிலையத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு, புலந்தஷாரில் பரத்வாஜ் செப்.4-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

செப்.7-ஆம் தேதி அவா் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு, திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த வழக்கு அடுத்தக் கட்ட விசாரணைக்காக அக்.6-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments