FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அதிகரிக்கும் டெங்கு பாதிப்புகள்: அடுத்தாண்டில் பயன்பாட்டுக்கு வரும் 'க்யூடெங்கா' தடுப்பூசி

டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் முதல் தடுப்பூசி அடுத்தாண்டில் அறிமுகம் செய்யப்படுவது குறித்து...

19 செப்டம்பர் 2026, 8:58 am IST
டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு - பிரதிப் படம்
பகிர்:

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும்நிலையில், டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் முதல் தடுப்பூசி அடுத்தாண்டில் அறிமுகம் செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் நடப்பாண்டில் டெங்கு காய்ச்சலால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி 1 முதல் செப். 18 வரையில் 2.10 பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டு, 16,830 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும், இதுவரையில் 9 பேர் பலியாகியுள்ளனர்.

மாநிலத்தில் காய்ச்சலால் யாரேனும் பாதிக்கப்பட்டால் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொள்ள மருத்துவத்துறை சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதனிடையே, டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் முதல் தடுப்பூசியான க்யூடெங்கா (QDENGA) தடுப்பூசியை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான ஒப்பந்தம் வெள்ளிக்கிழமையில் (செப். 18) கையெழுத்திடப்பட்டது.

ஜப்பானை சேர்ந்த டகேடா பார்மசூட்டிகல்ஸ் மருந்து நிறுவனம், க்யூடெங்கா தடுப்பூசி தயாரித்து, அதனைப் பரிசோதனை செய்ததில், முதல் இரண்டு தவணை தடுப்பூசிகளில் டெங்கு பாதிப்பு 90.4 சதவிகிதம் தடுக்கப்படுவதாகத் தெரிய வந்தது. பிரிட்டன், பிரேசில், ஸ்விட்சர்லாந்து, மலேசியா, தாய்லாந்து உள்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஏற்கெனவே இந்தத் தடுப்பூசி பயன்பாட்டில் இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி, டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளுக்கு கியூடெங்காவை உலக சுகாதார நிறுவனமும் பரிந்துரை செய்துள்ளது. உலகம் முழுவதும் 2.4 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டு உள்ளன.

இதனைத் தொடர்ந்து, க்யூடெங்கா தடுப்பூசியை இந்தியாவில் அறிமுகம் செய்யவும் சந்தைப்படுத்தவும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாடு அமைப்பு, கடந்த ஜூலை மாதத்தில் ஒப்புதல் அளித்தது.

இந்த நிலையில், தடுப்பூசியை நாட்டில் சந்தைப்படுத்தும் ஒப்பந்தத்தில் டகேடா நிறுவனமும் ஹைதரபாதை சேர்ந்த டாக்டர் ரெட்டீஸ் நிறுவனமும் வெள்ளிக்கிழமையில் (செப். 18) கையெழுத்திட்டது.

இதனைத் தொடர்ந்து, அடுத்தாண்டு ஜூன் மாதத்துக்குள் டெங்கு தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

summary

India to Launch First Approved Dengue Vaccine QDENGA in 2027

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments