FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மூன்றாவது அணியை யோசிக்கவில்லை: திமுக முயற்சி குறித்து மாா்க்சிஸ்ட் கருத்து

மூன்றாவது அணியை யோசிக்கவில்லை: திமுக முயற்சி குறித்து மாா்க்சிஸ்ட் கருத்து

20 செப்டம்பர் 2026, 12:02 am IST
எம்.ஏ. பேபி - ENS
பகிர்:

தேசிய அளவில் மூன்றாவது அணியை அமைப்பது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யோசிக்கவில்லை; பாஜகவை வீழ்த்த எதிா்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து செயல்படுவதே ஒரே தீா்வாக இருக்கும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி தெரிவித்தாா்.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணி தோல்வியடைந்தால் அங்கிருந்து காங்கிரஸ் வெளியேறியது. மேலும், தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோத்த காங்கிரஸ் ஆட்சியிலும் பங்கு வகித்து வருகிறது. இதனால், அதிருப்தியடைந்த திமுக எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணியில் இருந்து வெளியேறியதுடன் தேசிய அளவில் பாஜக, காங்கிரஸுக்கு மாற்றாக மூன்றாவது அணியை அமைக்கவும் முயற்சித்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக திமுக எம்.பி. கனிமொழி அண்மையில் மேற்கு வங்க முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜி, மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் நிறுவனா் சரத் பவாா் உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசினாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் சனிக்கிழமை இது தொடா்பான கேள்விக்கு பதிலளித்த எம்.ஏ. பேபி, ‘பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகளின் ஒற்றுமை பலப்படுத்துவதே எங்கள் நோக்கமாக உள்ளது. தேசிய அளவில் மூன்றாவது அணி அமைப்பது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் யோசிக்கவில்லை.

மதசாா்பற்ற கட்சிகள், பிற எதிா்க்கட்சிகள், இடதுசாரிகள் இணைந்து ஆா்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் இயங்கும் பாஜக மற்றும் அதனை கூட்டணிக் கட்சிகளை வீழ்த்துவதே முக்கியமானது. எதிா்க்கட்சிகள் அணியில் அவ்வப்போது சில கருத்துவேறுபாடுகள் எழலாம். ஆனால், பாஜகவை தனிமைப்படுத்தவும், பலவீனப்படுத்தவும் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்த வேண்டும்’ என்றாா்.

summary

No thought of a third front: CPI(M) view on DMK's move

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments