FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐடிடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!

கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளது குறித்து...

23 செப்டம்பர் 2026, 8:22 pm IST
மும்பை ஐஐடி, சென்னை ஐஐடி - கோப்புப் படம்
பகிர்:

கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தெரியவந்துள்ளது.

இதில் 120 மரணங்கள் கடந்த 11 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளன. எஞ்சிய 51 மரணங்கள் அதற்கு முந்தைய ஆண்டுகளில் பதிவானவை.

நாட்டின் மிகவும் மதிப்பு வாய்ந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) உள்ளது. நாடு முழுவதும் மும்பை, சென்னை உள்ளிட்ட பலவேறு நகரங்களில் 23 ஐஐடிக்கள் செயல்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

செறிவான கற்றல், தொழில்நுட்ப வேலைவாய்ப்பு, ஆராய்ச்சிப் படிப்பு போன்றவற்றுக்காக அதிகப்படியான மாணவர்களின் முதன்மைத் தேர்வாக ஐஐடிக்கள் உள்ளன.

இந்நிலையில், 2006 முதல் 2026 வரை, கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் ஐஐடி நிறுவனங்களில் 171 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் அல்லது இயற்கைக்கு புறம்பான மரணம் நிகழ்நதுள்ளன.

உலகளாவிய ஐஐடி முன்னாள் மாணவர்கள் குழுவின் நிறுவனரும் ஐஐடி கான்பூரின் முன்னாள் மாணவருமான தீரஜ் சிங், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்தத் தகவல்களைப் பெற்று பதிவிட்டுள்ளார்.

இதில் 2006 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 51 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2016 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் இது, 120 ஆக அதிகரித்துள்ளது.

ஆண்டுவாரியாகப் பார்க்கும்போது 2014 ஆம் ஆண்டு 13 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு 11 தற்கொலைகளும், 2019 ஆம் ஆண்டு 12 தற்கொலையும் நடந்துள்ளன.

2020க்கு பிறகு இந்த எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 2022, 2023, 2024 என தொடர்ந்து ஆண்டுதோறும் 14 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. 2025 ஆம் ஆண்டு இது 16 ஆக அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி வரை 13 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இவை ஒரே காரணங்களுக்காக நடந்தவை இல்லை என்றும், தனிப்பட்ட, கல்வி அழுத்தம், பொருளாதாரப் பிரச்னை, சாதிய பாகுபாடு மற்றும் மன அழுத்தம் காரணமாக நிகழ்ந்துள்ளதாகப் பதிவாகியுள்ளன.

சென்னைக்கு 2வது இடம்

ஐஐடிக்களில் நடந்த தற்கொலை அல்லது இயற்கைக்கு மாறான மரணங்களில் ஐஐடி கரக்பூர் முதலிடத்தில் உள்ளது. இங்கு இதுவரை 29 மாணவர்கள் இறந்துள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக ஐஐடி சென்னை உள்ளது. இங்கு 26 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. மூன்றாவது இடத்தில் ஐஐடி கான்பூர் உள்ளது. இங்கு 21 தற்கொலைகள்.

ஐஐடி தில்லி - 17, ஐஐடி மும்பை, ஐஐடி கெளஹாட்டி - 14 தற்கொலைகள், ஐஐடி ஹைதராபாத் - 9, ஐஐடி ரூர்கீ -8, ஐஐடி பாட்னா - 7 தற்கொலைகள் பதிவாகியுள்ளன.

நாட்டில் உள்ள ஐஐடிக்களில் ஜம்மு, பிலாலி, பாலக்காட்டில் உள்ள ஐஐடிக்களில் மட்டுமே எந்தவொரு தற்கொலையோ அல்லது இயற்கைக்கு மாறான மரணமோ பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

summary

171 IIT student suicides in 20 years Kharagpur, Madras top the list

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments