FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும் என ராகுல் காந்தி பேசியுள்ளது குறித்து...

24 செப்டம்பர் 2026, 6:12 pm IST
ராகுல் காந்தி - பிடிஐ
பகிர்:

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று (செப். 24) தெரிவித்தார்.

சில மாநிலங்களில் தொடர்ந்து பாஜக ஆட்சியில் நீடிப்பது எப்படி? என்று கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, 2024 தேர்தலுக்கு பின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் விவகாரம் குறித்து செய்தியாளர்களுடன் ராகுல் காந்தி பேசியதாவது:

Advertisement

Advertisement

தமிழகத்தில் திமுக, அதிமுக மாறி மாறி ஆட்சிக்கு வருவார்கள்; எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களிலும் இதுபோல் நிலைதான். ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் 10, 20 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் நீடிப்பது எப்படி?

இதன் பின்னணியின் பாஜகவின் மோசமான செயல்பாடுகள் உள்ளன. நாட்டில் நடிபெற்றுவரும் அனைத்து தேர்தல்களுமே முறைகேடாகவே நடத்தப்படுகிறது.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும்.

வாக்குத் திருட்டு நடைபெறுவதாக மகாராஷ்டிரம், ஹரியாணா மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. தற்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு மற்ற இரு ஆணையர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முறைகேடு நடைபெறுவதற்கான வாய்ப்பை இது வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.

நமது வாக்கு திருடப்பட்டால், ஜனநாயகம் திருடப்படும். நமது வாக்குரிமை அழிக்கப்பட்டால், ஜனநாயகம் அழிக்கப்படும்.

நமது அரசியலமைப்புச் சட்டம் சிதைக்கப்பட்டிருந்தால், நமது சட்டங்கள் சட்டவிரோதமானவை ஆகின்றன. சட்டங்கள் சட்டவிரோதமானவை என்றால், நமது அமைப்பு அர்த்தமற்றவையாகிவிடுகின்றன.

எனவே, இங்குள்ள முக்கிய கேள்வி என்னவென்றால், இது வாக்குரிமை மீதான தாக்குதல் மட்டுமல்ல; இது ஒரு கோட்பாடு, அடிப்படை கட்டமைப்பு மற்றும் ஒவ்வொரு இந்தியரின் கருத்து வெளிப்பாடு ஆகியவற்றின் மீதான தாக்குதலாகும் எனக் குறிப்பிட்டார்.

summary

Gyanesh Kumar must resign immediately Lok Sabha LoP Rahul Gandhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments