எஸ்.ஐ.ஆர்: நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும் - காங்கிரஸ்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் நீக்கப்பட்ட 13 கோடிக்கும் அதிகமானோரை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற காங்கிரஸ் கோரிக்கை குறித்து...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் நீக்கப்பட்ட 13 கோடிக்கும் அதிகமானோரை மீண்டும் சேர்க்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இன்று (செப். 29) தெரிவித்தார்.
தில்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு காங்கிரஸ் கூட்டத்தில் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்டுள்ளதாவது:
Advertisement
Advertisement
ஆர்.எஸ்.எஸ். - பாஜகவால் கைப்பற்றப்பட்ட தேர்தல் செயல்முறையை எதிர்க்க காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வாக்கு திருட்டு குறித்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறார். அவரது நம்பிக்கை மற்றும் காங்கிரஸின் தொடர்ச்சியான முயற்சிகள் காரணமாக சமீபத்தில் பல உண்மைகள் வெளிவந்துள்ளன. இன்று, இந்தியத் தேர்தலின் ஒருமைப்பாட்டை மீட்டெடுக்க நாடு முழுவதும் கோரிக்கை எழுந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
எங்களுக்கு 4 தெளிவான கோரிக்கைகள் உள்ளன. தலைமைத் தேர்தல் ஆணையர் உடனடியாகப் பதவி விலக வேண்டும். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை உடனடியாக இடைநிறுத்த வேண்டும். வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 13 கோடிக்கும் அதிகமான பெயர்கள் உடனடியாக மீண்டும் சேர்க்கப்பட வேண்டும். வாக்குத் திருட்டை திட்டமிட்டு நடத்திய பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளதாகப் பதிவிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.