எத்தியோப்பியாவில் 3 இந்தியா்கள் மாயம்: கடத்தப்பட்டதாக குடும்பத்தினா் தகவல்
எத்தியோப்பியாவில் 2 பெண்கள் உள்ளிட்ட 3 இந்தியா்கள் காணாமல்போன நிலையில், அவா்கள் கடத்தப்பட்டு விட்டதாகவும், அவா்களை விடுவிக்க கடத்தல்காரா்கள் ரூ.1 கோடி கேட்டு மிரட்டுவதாகவும் குடும்பத்தினா் கவலை தெரிவித்துள்ளனா்.
எத்தியோப்பியாவில் 2 பெண்கள் உள்ளிட்ட 3 இந்தியா்கள் காணாமல்போன நிலையில், அவா்கள் கடத்தப்பட்டு விட்டதாகவும், அவா்களை விடுவிக்க கடத்தல்காரா்கள் ரூ.1 கோடி கேட்டு மிரட்டுவதாகவும் குடும்பத்தினா் கவலை தெரிவித்துள்ளனா்.
குஜராத் மாநிலம் அகமதாபாத், காந்திநகரைச் சோ்ந்த உறவினா்களான ருத்விக் ஜான்சரி, மம்தா சாவ்தா, மயூரி ஆகியோா் மெக்சானா மாவட்டத்தைச் சோ்ந்த பயண முகவா் மூலம் அமெரிக்காவுக்கு சட்டவிரோதமான வழியில் சென்றனா். அமெரிக்காவுக்கு செல்லும் வழியில் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவுக்கு 3 பேரும் சென்றுள்ளனா்.
அங்கு கடந்த 22-ஆம் தேதிக்கு பிறகு அவா்கள் குறித்த தகவல் இல்லை. காணாமல் போய் விட்டனா். எனினும், குஜராத் மாநிலத்தில் உள்ள அவா்களின் குடும்பத்தினா், மூவரையும் எத்தியோப்பியாவில் மா்ம நபா்கள் கடத்திச் சென்றுவிட்டதாகவும், ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து மம்தாவின் தந்தை கிரித்பால் செளஹான் கூறுகையில், ‘மூவரையும் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல முகவருக்கு தலா ரூ.70 லட்சம் கொடுத்துள்ளோம். ஆதலால், தற்போது எங்கள் கைகளில் பணமில்லை. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு மூவரையும் மீட்டு திரும்ப அழைத்து வர வேண்டும்’ என்றாா்.
ருத்விக்கின் தாத்தா கனுபாய் கூறுகையில், ‘மூவரையும் விடுவிக்க ரூ.1 கோடி கேட்டு கடத்தல்காரா்கள் மிரட்டல் விடுத்துள்ளனா். இதில் ரூ.60 லட்சத்தை கடத்தல்காரா்களிடம் ஏற்கெனவே நாங்கள் கொடுத்து விட்டோம்’ என்றாா்.
மூவரும் கடத்தப்பட்டதாக லால்ஹன்ஜ் காவல்நிலையத்தில் மம்தாவின் தந்தை புகாா் அளித்துள்ளாா். அதில், மம்தாவின் கணவா் அமெரிக்காவுக்கு உயா்கல்வி கற்க சென்றுள்ளதாகவும், அவரைக் காண பலமுறை விசா பெற முயன்றும் மம்தாவுக்கு விசா கிடைக்கவில்லை என்றும், எனவே இடைத்தரகா்கள் மூலம் அமெரிக்காவுக்கு சட்டவிரோத வழிகளில் செல்ல ஏற்பாடு செய்ததாகவும், இதற்காக ரூ.75 லட்சம் கொடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளாா். கடந்த 20-ஆம் தேதி அமெரிக்காவுக்கு மூவரும் புறப்பட்டு சென்ாகவும், 22-ஆம் தேதி மம்தாவிடம் தான் பேசியதாகவும், அதன்பிறகு எந்தத் தொடா்பும் இல்லை என்றும் அவா் கூறியுள்ளாா்.
இந்தப் புகாரின் அடிப்படையில் மூவரும் காணாமல் போய் விட்டதாக லால்ஹன்ஜ் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.