FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

கூத்தாநல்லூரில்  சமையல் தொழிலாளர்களின் 120 குடும்பம் தவிப்பு

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் சமையல் தொழிலாளர்களின் 120 குடும்பங்கள் அன்றாட உணவுக்கு  தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

Updated On : 17 ஏப்ரல் 2020, 12:29 pm IST
பகிர்:

 
கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் சமையல் தொழிலாளர்களின் 120 குடும்பங்கள் அன்றாட உணவுக்கு  தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

சீனாவால் தொடங்கப்பட்ட கரோனா தொற்று நோய், அமெரிக்கா முதல் இத்தாலி, துபாய், இந்தியா உள்ளிட்ட உலகத்தையே தாக்கு, தாக்கென தாக்கிக் கொண்டிருக்கிறது. அனைத்து நாடுகளும் ஊரடங்குப் பிறப்பித்துள்ளன. விமானம் பறக்க வில்லை. கப்பல் மிதக்கவில்லை. ரயில்கள் ஓடவில்லை. பேருந்துகள் இயங்கவில்லை. நான்குச் சக்கரம் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் முழுவதுமாக வீட்டை விட்டு எடுக்கவில்லை. இவைகள் மட்டுமல்ல, விமானி முதல், அன்றாடக் கூலித் தொழிலாளிகள் வரை வேலைக்குச் செல்ல முடியாத நிலை. (இதில், காவலர்களும்,  மருத்துவர்களும், உயரதிகாரிகளும், பத்திரிகையாளர்களும் விதிவிலக்கு ) அன்றாடக் கூலி ேவலைப் பார்ப்பவர்கள் தினமும் உணவுக்காக கஷ்டப்பட்டு, பட்டினியில் வாடுகின்றனர். இவர்களில் சமையல் தொழிலாளர்களும் முக்கியமானவர்கள். இது குறித்து கூத்தாநல்லூர் நகர சமையல் கலை தொழிலாளர்கள் சங்கத் தலைவர் கொய்யா என்ற பீ.மீரா மைதீன் கூறியது. 

சமையல் தொழிலில் ஈடுபடுபவர்கள் கூத்தாநல்லூர் நகரத்தில் மட்டும் 120 குடும்பங்களுக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இந்த சமையல் தொழில் என்பது சீசன் தொழில் தான்.தை, மாசி மற்றும் பங்குனி உள்ளிட்ட 3 மாதத்தில்தான் தொடர்ந்து சமையல் வேலை இருக்கும். இந்த மாதங்களில் சம்பாதிப்பதுதான் எங்களுக்கு ஆண்டு முழுக்க உள்ள வருமானம்.கரோனா தொற்று நோயால் வேலையே இல்லை. திருமணம், காது குத்து, நிச்சயத்தார்த்தம் மற்றும் கோயில் விழாக்களுக்கும் இப்போது வழியில்லாமல் போய் விட்டது.இந்த மாதம் ரம்ஜான் மாதத்திற்கு முன்பாக நிக்காஹ் நடக்கும். கரோனா ெதாற்றால் நிக்காஹ் இல்லை.மேலும், ரம்ஜான் நோன்பை முன்னிட்டு, பள்ளி வாயில்களிலும் நோன்பு கஞ்சி செய்ய முடியாத நிலையாகி விட்டது. இப்படி எந்த வேலையும் இல்லாத நிலையில், ஊருக்கெல்லாம் சமையல் செய்து உணவளித்த,சமையல் கலை தொழிலாளர்களான எங்களுக்கு சாப்பாடு இல்லை. தமிழக அரசு சமையல் கலை தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமோ, உணவுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களையோ வழங்கிட வேண்டும் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments