குடியரசுத் தலைவர் தேர்தல்: பாஜக வேட்பாளர் திரெளபதி முர்மு
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட ஆளும் பாஜக கூட்டணி சார்பில் வேட்பாளராக திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார்.
புது தில்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட ஆளும் பாஜக கூட்டணி சார்பில் வேட்பாளராக திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார்.
தில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் குடியரசுத் தலைவர் வேட்பாளரை இறுதி செய்வதற்கு நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.
இதையும் படிக்க- எதிர்க்கட்சி குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹ
Advertisement
Advertisement
பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் குடியரசு தலைவர் வேட்பாளராக திரெளபதி முர்மு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுக்குறித்து பேசிய பாஜக தலைவர் ஜெ. பி. நட்டா, "முதல்முறையாக பழங்குடி சமூகத்தை சேர்ந்த பெண் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்" என்று தெரிவுத்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.