அமெரிக்கா, கனடாவில் திரும்பப் பெறப்படும் 10 லட்சம் குக்கர்கள்!
பத்து லட்சம் பிரஷர் குக்கர்களையும் உள் பாத்திரங்களையும் திரும்பப் பெறுகிறது அமெரிக்காவிலுள்ள பெஸ்ட் பை நிறுவனம்.
பத்து லட்சம் பிரஷர் குக்கர்களையும் உள் பாத்திரங்களையும் திரும்பப் பெறுகிறது அமெரிக்காவிலுள்ள பெஸ்ட் பை நிறுவனம்.
அமெரிக்காவிலும் கனடாவிலும் 2017 ஆம் ஆண்டு முதல் 2023 ஜூன் மாதம் வரை சுமார் 9.30 லட்சம் இன்சிக்னியா பிரஷர் குக்கர்களை இந்த நிறுவனம் விற்றிருக்கிறது.
இவற்றில் அளவுகள் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக அமெரிக்க நுகர்பொருள் பாதுகாப்பு கமிஷன் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக குக்கரைத் திறக்குபோது உணவுப் பொருள்களுடன் திரவமும் வெளிவந்துவிடுகின்றன. பயன்படுத்துவோர் மிகவும் கவனமாகப் பயன்படுத்துமாறும் கமிஷன் கேட்டுக்கொண்டிருக்கிறது.
Advertisement
Advertisement
தீக்காயமுற்றதாகத் தெரிவிக்கப்பட்ட 17 புகார்கள் உள்பட, உணவுப் பொருள்கள் கொட்டிவிடுவதாக 31 புகார்கள் பெஸ்ட் பை நிறுவனத்தால் பெறப்பட்டுள்ளன. கனடாவில் யாரும் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் இல்லை.
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள், குக்கர்களை மாற்றிக்கொள்ள பெஸ்ட் பை நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்று நுகர்வோர் அமைப்பு தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.