FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

அமெரிக்கா - சீனா வர்த்தகப் போரில் சிக்கும் குழந்தைகள்?

சீனா மீதான அமெரிக்காவின் வர்த்தகப் போரில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்களின் விலை உயர்வதைப் பற்றி...

Updated On : 12 ஏப்ரல் 2025, 4:22 pm IST
கோப்புப் படம்
பகிர்:

சீனா மீது அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரிகளினால் சீனாவில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் விளையாட்டுப் பொருள்களின் விலை பன்மடங்கு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து இறங்குமதி செய்யப்படும் அனைத்து பொருள்களின் மீதும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடியாக 145 சதவிகிதம் கூடுதல் வரி விதித்துள்ளார். இந்த வரி விதிப்பில் சீனாவில் தயாரிக்கப்படும் குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகள் உள்ளிட்ட பொருள்களும் அடங்கும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்க சந்தைகளில் விற்பனையாகும் விளையாட்டு பொருள்களில் 77 சதவிகிதம் சீனாவில் தயாரிக்கப்படுபவை. எனவே, அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரியால் அங்கு விற்பனைச் செய்யப்படும் விளையாட்டு பொம்மைகளின் விலையானது விண்ணைத் தொடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதுகுறித்து சீனாவின் பொம்மைகள் மற்றும் சிறார் பொருள்கள் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் லியாங் மெய் கூறுகையில், அமெரிக்க பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்காக ஏதேனும் பொருள்கள் வாங்க வேண்டுமென்று சந்தைக்குச் சென்றால் அங்கு விலைவுயர்ந்த பொருள்களைதான் அதிகம் பார்ப்பார்கள் என விமர்சித்துள்ளார்.

புகழ்பெற்ற பார்பி பொம்மைகளைத் தயாரிக்கும் மேட்டல் போன்ற நிறுவனங்கள் கூடுதல் வரிகளைச் சமாளிக்க பொம்மைகளின் விலையை உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளன.

முன்னதாக, கடந்த 2024-ம் ஆண்டின் மொத்த அமெரிக்க பொம்மை சந்தையின் விற்பனை 42 பில்லியன் அமெரிக்க டாலர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:பனிச்சரிவில் சிக்கி மாயமான நேபாள மலையேற்ற வீரர்கள்: தேடுதல் பணி நிறுத்தம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments