FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

சிலி அதிபர் இந்தியா வருகை!

சிலி நாட்டு அதிபர் இந்தியா வருவதைப் பற்றி...

Updated On : 27 மார்ச் 2025, 4:10 pm IST
சிலி நாட்டு அதிபர் கேப்ரியல் போரிக் ஃபொண்ட் - ஏபி
பகிர்:

சிலி நாட்டு அதிபர் 5 நாள் பயணமாக இந்தியா வருகிறார்.

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று தென் அமெரிக்க நாடான சிலியின் அதிபர் கேப்ரியல் போரிக் ஃபொண்ட் 5 நாள் அரசமுறைப் பயணமாக இந்தியா வருவதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வரும் ஏப்ரல் 1 முதல் 5 ஆம் தேதி வரையிலான இந்தப் பயணத்தில் அதிபர் போரிக் உடன் சிலியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய அதிகாரிகள், வணிகம் மற்றும் ஊடகம் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, பதவியேற்ற பின்னர் முதல்முறையாக இந்தியா வரும் அதிபர் போரிக் வரும் ஏப்ரல் 1 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருநாட்டு உறவுகள் குறித்த பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

மேலும், அவர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும் சந்தித்து பேசுவார் எனக் கூறப்பட்டுள்ள நிலையில் வருகை தரும் பிரதிநிதிகளுக்கு பிரதமர் மற்றும் ஜனாதிபதி சார்பில் மரியாதை நிமித்தமாக விருந்தளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் பயணத்தில் ஆக்ரா, மும்பை மற்றும் பெங்களூர் ஆகிய முக்கிய இந்திய நகரங்களுக்கு செல்லும் அதிபர் போரிக் அங்கு அரசியல், வர்த்தகம் மற்றும் தொழில் துறை ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவுள்ளார்.

முன்னதாக, இந்தியா மற்றும் சிலி நாடுகளுக்கு இடையே பாரம்பரியமாக நட்புறவு கொண்டாடப்பட்டு வருகின்றது. கடந்த 1947 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர நாள் கொண்டாட்டங்களில் லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து சிலி மட்டுமே அதன் தூதரை அனுப்பியிருந்தது.

இத்துடன், பருவநிலை மாற்றம், தீவிரவாதம் உள்ளிட்ட சர்வதேச அளவிலான பிரச்னைகளில் இந்தியா மற்றும் சிலி ஆகிய இருநாடுகளும் ஒரே நிலைப்பாடைக் கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: இந்தியா வருகிறார் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments