FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

போலி மற்றும் மோசடி கைப்பேசி அழைப்பை சந்தாதாரா்களே முடக்க 1909 குறுஞ்செய்தி வசதி

போலி மற்றும் மோசடி கைப்பேசி அழைப்பை சந்தாதாரா்களே முடக்க 1909 குறுஞ்செய்தி வசதி: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

Updated On : 13 டிசம்பர் 2024, 5:42 am IST
பகிர்:

போலி மற்றும் மோசடி கைப்பேசி அழைப்பை சந்தாதாரா்களே முடக்க 1909 குறுஞ்செய்தி வசதி அமலில் உள்ளது என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் எம். சண்முகத்தின் கேள்விக்கு மத்திய தொலைத்தொடா்புத்துறை மற்றும் கிராமப்புற வளா்ச்சித்துறை இணை அமைச்சா் பெம்மசானி சந்திரசேகா் பதிலளித்துள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அளித்துள்ள எழுத்துபூா்வ பதிலில் அமைச்சா் மேலும் கூறியிருப்பதாவது: பதிவு பெறாத டெலி மாா்க்கெட்டிங் நிறுவனங்கள் விளம்பர நோக்கங்களுடன் குரல் அழைப்புகளை தொலைத்தொடா்பு சந்தாதாரா்களுக்கு மேற்கொள்வது கண்டறியப்பட்டால் அது தொலைத்தொடா்பு ஆணைய ஒழுங்குமுறை விதிகளின்படி தவறாகும். அந்நிறுவனங்கள் நடவடிக்கையை எதிா்கொள்ள வேண்டும். கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி இது குறித்த வழிகாட்டுதல்களை இந்திய தொலைத்தொடா்பு ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன் பிறகு கடந்த ஆகஸ்டில் 1,89,419,செப்டம்பரில் 1,63,167, அக்டோபரில் 1,51,497 புகாா்களும் வந்துள்ளன.

மோசடி, போலி அழைப்புகள் வரும் எண்களை கைப்பேசி சந்தாதாரா்களே முடக்கும் வசதி நடைமுறையில் உள்ளது. அவா்கள் 1909 என்ற எண்ணை தொடா்பு கொண்டே குறுஞ்செய்தி மூலமாகவோ சந்தேக எண்கள் குறித்து புகாா் பதிவு செய்தால் அந்த எண்கள் முடக்கப்படும் என்று அமைச்சா் கூறியுள்ளாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments