FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

ஆட்டநேர முடிவில் விராட் கோலி விக்கெட்டை வீழ்த்தியதில் மகிழ்ச்சி: ரச்சின் ரவீந்திரா

விராட் கோலியின் விக்கெட்டினை கைப்பற்றியது நியூசிலாந்துக்கு மிகப் பெரிய சாதகமான விஷயம் என அந்த அணி வீரர் ரச்சின் ரவீந்திரா தெரிவித்துள்ளார்.

Updated On : 18 அக்டோபர் 2024, 9:17 pm IST
விராட் கோலி - படம் | AP
பகிர்:

விராட் கோலியின் விக்கெட்டினை கைப்பற்றியது நியூசிலாந்துக்கு மிகப் பெரிய சாதகமான விஷயம் என அந்த அணி வீரர் ரச்சின் ரவீந்திரா தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கும், நியூசிலாந்து அணி 402 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. இந்திய அணி தற்போது அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

Advertisement

Advertisement

ஆட்டநேர முடிவில் விக்கெட்

இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி மற்றும் சர்ஃபராஸ் கான் அதிகபட்சமாக தலா 70 ரன்கள் எடுத்தனர்.

மூன்றாம் நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் விராட் கோலி 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆட்டநேர முடிவில் விராட் கோலியின் விக்கெட்டினைக் கைப்பற்றியது நியூசிலாந்துக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது. விராட் கோலியின் விக்கெட்டினை கைப்பற்றியதன் மூலம், விராட் கோலி மற்றும் சர்ஃபராஸ் கான் இடையேயான 136 ரன் பார்ட்னர்ஷிப் முடிவுக்கு வந்தது.

முக்கியமான விக்கெட்

ஆட்டநேர முடிவில் விராட் கோலியின் விக்கெட்டினை கைப்பற்றியது நியூசிலாந்துக்கு மிகப் பெரிய சாதகமான விஷயம் என அந்த அணி வீரர் ரச்சின் ரவீந்திரா தெரிவித்துள்ளார்.

ரச்சின் ரவீந்திரா - படம் | AP

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நல்ல விக்கெட்டில் இந்தியா போன்ற பேட்டிங் வரிசை உள்ள அணியிடம் விக்கெட்டுகளைக் கைப்பற்றுவது கடினம். அதனால் சரியான லைன் அண்ட் லென்த்தில் பந்துவீசுவது மிகவும் முக்கியம். ஆட்டநேர முடிவில் விராட் கோலியின் விக்கெட்டினைக் கைப்பற்றியது மிகவும் முக்கியமான தருணம் என நினைக்கிறேன்.

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி 9000 ரன்களைக் கடந்துள்ளார். இது மிகப் பெரிய சாதனை. அவரது விக்கெட்டை கைப்பற்றியது மிகவும் முக்கியமான தருணம். நாளை ஆட்டம் தொடங்கியவுடன் இந்திய அணியின் விக்கெட்டுகளை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

இந்திய அணி நியூசிலாந்தைக் காட்டிலும் 125 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments